Raja rani serial heroine name-3 முறை மாற்றப்பட்ட ராஜா ராணி 02 நாயகி..!

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி ரசிகர்களின் பேராதரவு பெற்றதால் அது சீசன் இரண்டிலும் தொடர்ந்தது.;

Update: 2023-09-23 09:27 GMT

Raja rani serial heroine name-ஆஷா கௌடா (கோப்பு படம்)

Raja rani serial heroine name

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கடந்த மாதத்தில் முடிந்துள்ள ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நாயகி கதாபாத்திரம் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடித்து வந்த ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகிய பின்னர் றிய விஸ்வநாத் நாயகியாக ஒப்பந்தமானார்.


அவரும் கடந்த 2023, பிப் 16 முதல் மாற்றப்பட்டு புதிய நாயகி நடிக்கத்தொடங்கினார். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் தீடிரென மாற்றப்பட்டு அவருக்குப் பதில் நடிகை ஆஷா கவுடா நாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யார் இந்த புதிய நடிகை ஆஷா கவுடா, இவரை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.

Raja rani serial heroine name


ராஜா ராணி

விஜய் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மெகா தொடர். தற்போது முதல் சீசன் தொடரின் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 02 தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த தொடரில் சித்து சித், பிரவீனா மற்றும் ஆஷா கவுடா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த ராஜா ராணி சீசன் 02 தொடரில் நாயகியாக ஆல்யா மானசா நடித்தார். பின் அவருக்கு பதில் ரியா விஸ்வநாத் நாயகி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தீடிரென நடிகை ஆஷா கவுடா நாயகி கதாபாத்திரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Raja rani serial heroine name


ஆஷா கவுடா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவு பெற்ற 'கோகுலத்தில் சீதை' தொடரில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரையில் தன் திரைப்பயணத்தை தொடங்கியவர், ஆஷா கவுடா. இவர் கர்நாடகாவில் மைசூர் நகரத்தில் பிறந்தவர். மாடலிங் துறை மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தற்போது சின்னத்திரை & வெள்ளித்திரைகளில் நடித்து அசத்தி வருகிறார்.


திரைப்பயணம்

நடிகை ஆஷா கவுடா ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். தன் தோழிகளுடன் இணைந்து மாடலிங் பணியை செய்துள்ள இவருக்கு, கோகுலத்தில் சீதை தொடரில் நாயகி கதாபாத்திரம் கிடைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமாகியுள்ளார். சின்னத்திரை மட்டுமில்லாமல் இவர் 'நந்தி வர்மன்' என்னும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.


ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் ஆஷா

Raja rani serial heroine name

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'ராஜா ராணி சீசன் 02' சீரியல் தொடரில் நாயகியாக நடிக்கும் ஆஷா, இந்த சீரியலில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஜிம் பயிற்சியாளராக பணியாற்றிய இவர், போலீஸ் அதிகாரி போல கம்பீரமான உடலை கொண்டுள்ளார். இவர் நடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு இவர் நிச்சியம் பொருத்தமாக இருந்தார் என்று படக்குழுவினர் கூறியதோடு அல்லாமல் அவரது ரசிகர்களும் சீரியலில் அவரை வெகுவாக ரசித்தனர்.

Tags:    

Similar News