முத்தான படங்களால் முத்திரை பதித்த திரைப்பட இயக்குனர் ராஜ்கபூர்

Raj Kapoor Tamil Film Director - தமிழ் திரையுலகில் முத்தான படங்களை தந்து தனக்கென பாணியை வகுத்துக் கொண்டவர் இயக்குனர் ராஜ்கபூர்.;

Update: 2022-06-01 14:15 GMT

இளைய திலகம் நடிகர் பிரபு கனகா நடித்த 'தாலாட்டு கேக்குதம்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர் #Raj Kapoor Tamil film director. தேனி மாவட்டம் கோம்பையை சொந்த ஊராகக் கொண்ட ராஜ்கபூர், கடந்த 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர்.

சினிமா மீது கொண்ட காதலால் சென்னைக்கு வந்த ராஜ்கபூர், இயக்குனர் சி.வி. ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். கடந்த 1991ல் 'தாலாட்டு கேட்குதம்மா' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.


நடிகர் அஜித் நடித்த, 'அவள் வருவாளா', 'ஆனந்தப் பூங்காற்றே' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். உத்தமராசா, என்ன விலை அழகே, சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். இவரது கடைசியாக இயக்கிய படம் வம்பு சண்டை.

Raj Kapoor Tamil film director இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். ராஜ்கபூர், தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, தென்னவன், அய்யா, ஆறு, அரண்மனை 2 உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக மிரட்டினார்.

இதுதவிர, ஏராளமான சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News