தாசனுக்கு தாசன் 'கண்ண'தாசன் தான்..!

ஆரம்பத்தில் நாத்திகம் பேசிய கவிஞர் தான் பிற்காலத்தில் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினார்.

Update: 2024-05-25 08:45 GMT

கவிஞர் கண்ணதாசன் 

தான் இறக்கும்வரை கண்ணனை நினைத்தே உருகினார். சரி வாங்க இது பற்றி பாக்கலாம். ஒரு தாலாட்டு எழுதி தரணும்.. அதற்கும்...

"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ"

இதுல சிறப்பே

"அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" இந்த வரிதான்.

இது அந்த கண்ணனுக்கு பாடும் தாலாட்டு. அடுத்து நான் என் மகனுக்கு பாட ஒரு தாலாட்டு எழுதி குடுங்க என்று கேட்டால்... "சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ... சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ... கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா...

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி

கள்ளமற்ற வெள்ளை மொழி

தேவன் தந்த தெய்வ மொழி"

அடுத்து நாயகிக்கு காதல் வந்துடுச்சு.. அதற்கு..

" கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

எண்ணம் என்னும் ஆசை படகு செல்ல செல்ல

வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள துள்ள"

லவ் செட் ஆயிடுச்சு டேட்டிங் போறாங்க

"யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே"

கண்ணன் வேணா ராமனை வச்சு எழுதி தாங்க என கேட்டால்...

"அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்"

லவ் வீட்டுக்கு தெரிஞ்சுடுச்சு, வேற மாப்பிள்ளைய கட்டிக்க சொல்றாங்க அப்ப நாயகி என்ன சொல்லுவா?

"வாழ்ந்தால்  உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை.. அந்த மங்கையின் வழிகண்டு வாழ்வதில் சுகமுண்டு இலக்கியம் அவள் பாதை"

வீட்ல க்ரீன் சிக்னல் கெடச்சுடுச்சு..

சுயம்வரத்துல நாயகி தோழிகள் கிண்டல் பண்ற மாதிரி

"அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்

அந்த பொல்லாத கண்ணனின் ராதை

நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக் கொண்டாள்

அந்த புல்லாங்குழல் மொழிக் கோதை"

அடுத்து கல்யாணம்

"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தோழி... வைதேகி காத்திருந்தாளோ?

மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தோழி... தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தோழி"

அடுத்து முதலிரவு அதற்கும் கண்ணன் தான்...

"குத்து விளக்கேற்றிய

கூடமெங்கும் பூமணக்க

மெத்தை விரித்திருக்க

மெல்லியலாள் காத்திருக்க

வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை"

( இந்த ரெண்டு வரிய சுசீலா குரல்ல ஒருமுறை கேட்டு பாருங்க)

இப்ப இன்னொரு அப்பா வந்து தன்னோட பெண் கருப்பா இருக்குறதால எல்லோரும் ஒதுக்குறாங்கனு சொல்றார்

"கண்ணா! கருமை நிறக் கண்ணா!

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா

நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா"

எல்லாம் சரி சார் இந்த நாயகன் ஏதும் பாட மாட்டான ?

பாடுவான் பஞ்சாயத்து எதுனா வந்தா பாடுவான்

"ஆட்டு வித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!

ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா!

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவு ஆனாலும்  கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

உணர்ந்து கொண்டேன் துன்பமது  விலகும் கண்ணா"

எல்லாம் கை மீறி போயிடுச்சு சார். என் வாழ்க்கை அவ்வளவு தானா???

கவலைப்படாதப்பா

" நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்

கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்

கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்

தர்மம் எனும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்

தாளாத துயர் நீக்க கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்"

யப்பா தெய்வமே

எனக்கு அத்திக்காய் பாட்டுல எப்படி எல்லா காயையும் சொன்னீங்களோ அதே மாரி ராமனை பத்தி...

"ராமன் எத்தனை ராமனடி

கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன்

காவலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்

அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்

அலங்கார ரூபம் அந்த சுந்தர ராமன்

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்

தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்

வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகு ராமன்

மதங்களை இணைப்பவன் சிவராமன்

மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்

முடிவில்லாதவன் அனந்த ராமன்"

சார் ஆகமொத்தம் 12 ராமன்

ராமன் வந்தா ராமாயணம் வருமே

"கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்கவில்லையே

சீதை அன்று நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே"

அட!!!

உங்களுக்கு கண்ணன் மேல எப்பவாச்சும் கோபம் வந்துருக்கா ?

வந்திருக்குப்பா.

"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத

இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா! வஞ்சகன் கண்ணனடா

கர்ணா வஞ்சகன் கண்ணனடா"

மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும்

பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா

கர்ணா மன்னித்து அருள்வாயடா"

ஓ கர்ணனை கொன்னதுக்கா.

கர்ணனை சொல்லீட்டீங்க அந்த மகாபாரதம் பத்தி 4 வரி

"பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்

அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்

நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்"

எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்.

இப்படிக் கண்ணா கண்ணானு உருகிய நம் கவியரசர் 13ம் ஆழ்வார் என்பதில் ஐயமில்லை... 

Tags:    

Similar News