சரவணனின் தயக்கம் என்ன ஆகப்போகிறது? பாருங்கள் பாண்டியன் ஸ்டோர்..!
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் 2ம் பாகமாக வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
Pandian Stores Today Episode
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணனின் திருமணத்திற்கான முயற்சிகளை பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மேற்கொள்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீரியலில் புரோக்கர் மூலமும் பேப்பரில் விளம்பரம் கொடுத்தும் மேட்ரிமோனி மூலமாகவும் பல தரப்பிலும் சரவணனுக்கு தொடர்ந்து பெண் பார்த்து வருகின்றனர் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர். இருந்தபோதிலும் அவருக்கு பெண் கிடைக்காத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Pandian Stores Today Episode
இதற்காக மீனா மற்றும் கோமதியுடன் பாண்டியன் இந்த நிகழ்ச்சிக்கு செல்கிறார். கூடவே பழனிவேலும் இணைந்து கொள்கிறார். அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் மற்ற பெண் வீட்டாரிடம் பேச முயற்சிக்கின்றனர். ஆனால் ஒவ்வொருவரும் தங்களது எதிர்பார்ப்பை கூற சரவணன் அதற்கு பொருந்தாத சூழல் காணப்படுகிறது. இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சரவணனுக்கு துணையாகும் பெண்ணும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து முன்னதாக வெளியான ப்ரோமோக்களிலும் காட்டப்பட்டது. ஒருவழியாக சரவணனின் திருமணம் இன்னும் சில எபிசோடுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் 50 நாட்களில் சரவணன் திருமணத்தை நடத்துவேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் ஏற்ற சபதமும் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கலாம்.
Pandian Stores Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களாக தன்னுடைய ஒலிபரப்பை தொடர்ந்து வருகிறது. இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை கதைக்களமாக இயக்குனர் கொண்டுள்ளார்.
சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி, அவர்களின் மூன்று மகன்கள் மற்றும் மகள்கள், இவர்கள் மட்டும் இல்லாமல் கோமதியின் அண்ணன்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை கட்டுக் கோப்பாக வைத்து அந்த ஊர் மக்களுக்கே உதாரணமாக இருந்து வருகிறார் பாண்டியன். ஆனால் அவரது அடுத்தடுத்த மகன்களின் திருமணம் அவரை ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்துகிறது.
அவமானத்தில் பாண்டியன்: ஒரு மகனுக்கு கூட திருமண சாப்பாடு போட மாட்டாயா என்று மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு அவர் மற்றவர்களிடம் அவமானப்படுகிறார். இதனால் தன்னுடைய மூத்த மகன் திருமணமும் கேள்விக்குறியான நிலையில் அவரது திருமணத்தை 50 நாட்களுக்குள் முடிப்பேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் அவர் சபதம் ஏற்கிறார்.
இதனிடையே சரவணனின் திருமணத்தை கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் இருவரும் இணைந்து குலைத்து வருவதும் நடந்து வருகிறது. புரோக்கர் மூலமாகவும் பேப்பரில் விளம்பரம் கொடுத்தும் மேட்ரிமோனி மூலமாகவும் அடுத்தடுத்து சரவணனுக்கு திருமண ஏற்பாடுகளை பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர்.
Pandian Stores Today Episode
தடைபடும் சரவணன் திருமணம்: இவை அனைத்தும் நிறைவேறாமல் பல்வேறு காரணங்களால் தடை படுகிறது. இதனிடையே கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு பெண்பார்க்கும் படலத்தில் தற்போது பாண்டின் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கும் வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் கிளம்பிய சூழலில் சரவணன், கோமதி மற்றும் மீனாவை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு பாண்டியன் இந்த கல்யாண வைபோகம் நிகழ்ச்சிக்கு செல்கிறார், கூடவே அவரது மைத்துனன் பழனிவேலும் இணைந்து கொள்கிறார்.
அவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் தனக்கு ஏதாவது வரன் கிடைக்குமா என்று அவர் எதிர்பார்ப்பதை பார்க்க முடிகிறது. கடுப்பாகும் பாண்டியன்: இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அடுத்தடுத்து பெண் வீட்டாரிடம் சென்று பேசுவதாகவும் ஆனால் அவர்கள் ஒவ்வொரு காரணங்களால் அவர்களை தட்டி கழிப்பதையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் மேடைக்கு சென்று பேசும் பெண் வீட்டார் மாப்பிள்ளை குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை கூறுகின்றனர். இதனால் பாண்டியன் கடுப்பாவதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதனிடையே நிகழ்ச்சியிலிருந்து கிளம்பி போய்விடலாம் என்று அவ்வப்போது சரவணன் தயக்கத்துடன் கூறுவதையும் பார்க்க முடிகிறது.
Pandian Stores Today Episode
வியர்த்து வழியும் சரவணன்: இந்நிலையில் பாண்டியன் குடும்பத்தினரை மேடைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூப்பிடுகிறார். அங்கு சென்று சரவணன் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ளுமாறு அவர் கூறுகிறார். ஆனால் இதையடுத்து சரவணன், வியர்த்து வழிகிறார்.
என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெண் வீட்டார் வந்த நிலையில் அவர்களும் சரவணனின் இந்த நிலையை பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. மீனா, பழனிவேல் மட்டுமில்லாமல் பாண்டியன், கோமதியும் சரவணனின் இந்த தயக்கத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.