பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' வெளியே போய்ட்டாங்களாம்..! அடுத்த முல்லை யாரோ..?!
Mullai Pandian Stores-விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்றாகும்.;
Mullai Pandian Stores-விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பை எடுத்துக்கூறும் செண்டிமெண்ட் கதை. அதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனிப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பலரின் பாராட்டுகளோடு போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இன்றுடன் விலகப் போவதாக ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த சீரியலின் முக்கிய கதாப்பாத்திரமான ஐஸ்வர்யாவை இரண்டு முறை மாற்றிவிட்டார்கள். இந்த நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரையும் மாற்றப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முல்லை கதாபாத்திரத்தில் ஏற்கனவே விஜே சித்ரா மிகச் சிறப்பாக நடித்து வந்தார். அவரது திடீர் மறைவுக்குப் பிறகு காவ்யா அறிவுமதி முல்லை கேரக்டரில் அந்த சீரியலில் கொஞ்சம் செல்லமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தொடக்கத்தில் சித்ரா ரோலில் நடித்த காவ்யாவை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயங்கினர். அதன்பிறகு சமீபத்தில்தான் அவரை முல்லையாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவரும் சிறப்பாகவே பேசப்பட்டார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பதற்கு முல்லை-கதிர் ஆகியோரின் ரொமான்ஸ்-ம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை சிறப்பாக போய் கொண்டிருந்த நிலையில் காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் 'Bye Dears' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து காவ்யா, முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பது இன்று தான் கடைசி நாள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிர்ந்து போனார்கள் அவரது ரசிகர்கள்.
ஏற்கனவே விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலி, அகில் அதைத்தொடர்ந்து ராஜா ராணி2 சீரியலில் ஆலியா, வில்லி அர்ச்சனா என பலர் விலகியதால் இந்த இரண்டு சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 5 இடத்திலிருந்து தள்ளிப் போய்விட்டது.
அவைகளைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கேரக்டரான முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமதியும் விலகினால் நிச்சயம் அது விஜய் டிவியின் டிஆர்பி-க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ரசிகர்களும் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புத் தேடி வந்திருப்பதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். அண்மையில் வெளிவந்த லிப்ட் திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாகவும், நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திலும் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2