பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி மாறுகிறாரா..? ஆல்யா மானஸாவுக்கு வாய்ப்பாம்..?!

New Mullai in Pandian Stores-ராஜா ராணி தொடரில் நடித்த ஆல்யா மானசா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நாயகியாகப் போகிறார் என்று ஒரு தரப்பு செய்தி பரவி வருகிறது.;

Update: 2022-09-20 12:08 GMT

New Mullai in Pandian Stores

New Mullai in Pandian Stores-தமிழ் சீரியலில் பரபரப்பாக பேசப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மேலும் ஒரு மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் உலா வருகின்றன. முல்லை வேடத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணிக்கு பதிலாக ஆல்யா மானசா விரைவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு முக்கிய பிரபலம் விலக இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியலாக இது திகழ்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ். முல்லை வேடத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணிக்கு பதிலாக ஆல்யா மானசா விரைவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லையாக முதலில் நடிகை வி.ஜே சித்ரா நடித்தார். அவரது சோகமான மறைவுக்குப் பிறகு, அந்த பாத்திரத்தை காவ்யா அறிவுமணி ஏற்றார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், முல்லை கதிரை மணக்கிறார். அவள் ஆரம்பத்தில் அவனை வெறுத்தாலும், அவள் அவனை நேசிக்க ஆரம்பித்தாள். தற்போது முல்லையின் கர்ப்பத்தை சுற்றி கதை தொடங்கியுள்ளது.

இந்த கதாபாத்திரம் காவ்யா அறிவுமணிக்கு பரவலான பிரபலத்தை பெற்றுத்தந்தது. அவர் 'ரிப்புபுரி' என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இப்போது காவ்யா அந்த சீரியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா நடிக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News