கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் இயக்குனர்களுக்கு திடீர் நிபந்தனை

கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் இயக்குனர்களுக்கு திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.;

Update: 2022-10-27 14:24 GMT

சன்னி லியோன்.

இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் அறிமுகம் ஆனவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவருடைய உண்மையான பெயர் கரெஞ்சித் கவுர் வோரா.சினிமாவுக்காக சன்னி லியோன் என்று தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டார். இவர் கனடாவில் பிறந்தவர். இந்திய வம்சாவளியை சோ்ந்த  இந்தோ-கன்னடியன் ஆவார். இவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இந்தியாவுக்கு வந்து இந்தி படங்களில் நடிக்கத்தொடங்கினார். இவர் 2012ல்  ஜிஸ்ம் 2 என்ற இந்தி  திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.அதோடு இந்தி படங்களில்  கவர்ச்சி நடனங்கள் ஆடி பிரபலமானார். ஒரு இந்தி தொலைக்காட்சி நடத்திய இந்தி பிக்பாஸ் நிழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.மேலும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் தொழில் அதிபர்கள் வீட்டு நிகழ்ச்சிகள்,புத்தாண்டு விழாக்களில் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு நடனம் ஆடுவார். அரைகுறை ஆடையில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அவரை இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று சில இந்தி கவர்ச்சி நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் குரல் எழுப்பி உள்ளனர். ஆனால் சன்னி லியோன் எந்த எதிர்ப்பை பற்றியும் கவலைப்படாமல் இந்தி சினிமா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணம் ஆகிவிட்டது. 3குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

சன்னிலியோன் தற்போது சில தமிழ்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் நடித்துள்ளார். தற்போது வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அடுத்ததாக புதிய தமிழ் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். 'சிந்தனை செய்' பட இயக்குநர் யுவன் இயக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில்  நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் படமாக  உருவாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகியாக  சன்னி லியோனை நடிக்க வைக்க உள்ளதாகவும்,படத்தின் கதை சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் இயக்குனர் யுவன் கூறியுள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தான் சினிமாவில் குத்தாட்ட பாடல்களில் கவர்ச்சியாக நடனம் ஆட ஒரு நிபந்தனையை சன்னிலியோன் விதித்துள்ளார். இது பற்றி சன்னி லியோன் கூறும்போது, ''நான் பல படங்களில்  குத்துப்பாடல்களில் கவர்ச்சியாக நடனம் ஆடி வருகிறேன். இவ்வாறு நடன காட்சிகளை படம்பிடிக்கும் போது  இயக்குனர்களிடம்  கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனை  ஒன்றையும் கூறியுள்ளேன். படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும் சூட்டிங் நடைபெறும் இடத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். குத்துப்பாடலில்  நிச்சயம் வயது வந்தோருக்கான  காட்சிகள் தான் இருக்கும். அப்போது சுற்றிலும் குழந்தைகள் இருப்பதை நான் விரும்ப மாட்டேன். அப்படி இருந்தால் நானே படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன். எனக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கணவரோடு சேர்ந்து அவர்களை வளர்த்து வருகிறேன். அதனால் தான் இந்த நிபந்தனை" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News