நஸ்ரியாவுக்கு தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம்

இனி என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் மட்டும் பயணம் செய்யவே மாட்டேன் என கூறியுள்ளார்;

Update: 2022-08-19 09:04 GMT

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேபோல் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நஸ்ரியா, தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை மயக்கினார்.

இவரது துடுக்குத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நஸ்ரியா மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நஸ்ரியாவுக்கு, சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபஹத் பாசிலுடன் காதல் வந்தது. பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, தற்போது மீண்டும் தனது சுட்டித்தனமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், அவர் விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நஸ்ரியா தனக்கு விமான பயணத்தில் நடந்த மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில்  பகிர்ந்துள்ளார். தாய்லாந்து பயணத்தின் போது அந்நாட்டு தாய் ஏர்வேஸ் விமானத்தில் தான் தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவிகேட்டு பணியாளர்களை அழைத்தேன். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால், இனி என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் மட்டும் பயணம் செய்யவேமாட்டேன்" என கூறியுள்ளார்

Tags:    

Similar News