அதிக விருதுகள் பெற்ற இந்திய நடிகர்கள் யார்?

இந்திய நடிகர்களில் அதிக விருதுகள் பெற்ற நடிகர்கள் யார் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Update: 2022-01-20 12:21 GMT

2000ம் ஆண்டில் இருந்து இப்போது வரை அதிக விருதுகளை பெற்ற நடிகர்கள். 

  • மாபெரும் நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளனர்.  அதில்      சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதும் கமல்ஹாசன் பெற்றுள்ளார்.

அமிதாப் பச்சன், அக்னிபத், பிளாக், பா மற்றும் பிகு திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதுகளை மலையாள நடிகர் மம்மூட்டி பெற்றுள்ளார்.
  • மிதுன் சக்ரவர்த்தி, நடிப்பிற்காக 3 தேசிய விருதுகளையும், சிறந்த நடிகர் பிரிவில் 2 விருதுகளையும், சிறந்த துணை நடிகருக்கான ஒரு விருதையும் பெற்றுள்ளார்.
  • நசிருதீன் ஷா, நடிப்பிற்காக 3 தேசிய விருதுகளையும், சிறந்த நடிகர் பிரிவில் 2 தேசிய விருதுகளையும், சிறந்த துணை நடிகருக்கான ஒரு விருதையும் பெற்றுள்ளார்.
  • மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பிற்காக 3தேசிய விருதுகளும், 2 சிறந்த நடிகருக்கான விருதுகளும், 2016ல் புலிமுருகன், ஜந்தா கேரேஜ் போன்ற படங்களில் நடித்ததற்காக சிறப்பு ஜூரி விருதும் பெற்றுள்ளார்.
  • நானா படேகர் நடிப்பிற்காக 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். கிராந்திவீரனில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், பரிந்தா மற்றும் சாக்ஷி திரைப்படங்களில் சிறந்த துணை நடிகருக்கான 2 விருதுகளையும் பெற்றார்.
  • பிரகாஷ் ராஜ் நடிப்பிற்காக 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். வெவ்வேறு பிரிவுகளில், சிறந்த துணை நடிகருக்கான ஒன்று, சிறந்த நடிகருக்கான ஒரு விருது மற்றும் ஒரு சிறப்பு நடுவர் விருதையும் பெற்றுள்ளார்.
  • மனோஜ் வாஜ்பாய் பல்வேறு பிரிவுகளில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். சத்யா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் முதல் தேசிய விருதும், பிஞ்சர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு ஜூரி விருதும், போன்ஸ்லேயில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதும் பெற்றார்.
  • தனுஷ், ஓம்பூரி, அஜய் தேவ்கான், சஞ்சீவ் குமார் மற்றும் சன்னி தியோல் போன்ற நடிகர்கள் வெவ்வேறு பிரிவுகளில் நடித்ததற்காக 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News