சினிமாவில் எம்.ஜி.ஆரை மிஞ்சிய சாப்பாட்டு பிரியர்

சினிமாவில் எம்.ஜி.ஆரை மிஞ்சிய சாப்பாட்டு பிரியர் சிவாஜி.;

Update: 2024-08-11 08:13 GMT

அவர் வீட்டிலும், எம்.ஜி.ஆர் வீட்டிலும் சாப்பாடு சாப்பிட்டவங்க அதை மறந்ததே கிடையாது. நடிப்புல இந்த சாப்பாட்டை விரும்புற மாதிரி நடிக்கிறதுல சிவாஜி மாதிரி யாரும் நடிச்சதா தெரியல. தன் படங்களில் தனக்கு சாப்பாடு பிடிக்கும்ங்கிற மாதிரி காட்சி வந்தா சிவாஜி அந்த சின்னக்காட்சியை அழகா ஆக்கி விடுவார்.

முதல் மரியாதை படத்தில் ராதாவோட அந்த மீன் காட்சியில் ராதா மீனை வாய்க்குள்ள போட்டு உருவினதும் சிவாஜி ஒரு ஏக்கப்பார்வை பார்ப்பார் பாருங்க. நடிப்பின் இமயம் அது தான். இதுல வேற உப்புகண்டம் குழம்பை பழித்து ஒரு டயலாக். மிக அற்புதமான அந்த நடிப்புல சிவாஜி அவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் குழந்தை மனசை காட்டிடுவார். அது தான் சிவாஜியின் நடிப்பு. இது அவர் கால லெஜண்ட்ஸ் என்.டி.ஆர், ஏ.என்.ஆர், ராஜ்குமாருக்கெல்லாம் வராத ஒன்று.

'இமயம்'னு ஒரு படம். கதைப்படி அது நேப்பாளத்தின் ஹிந்து கோவில். அங்கு நாயகி ஸ்ரீவித்யாவும், அவங்க அம்மாவும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வார்கள். ஸ்ரீவித்யாவை சந்திக்க வருவார் சிவாஜி. சிவாஜி சைகை செய்ததும் அம்மாவுக்கு தெரியாம ஸ்ரீவித்யா எழுந்து வருவார். அவர் காதலன் சிவாஜிக்கு தன் ஹேண்ட் பேக் திறந்து ஒரு பாக்ஸை கொடுப்பார்.

"உங்களுக்குப் பிடிக்கும்னு மான் கறி செய்து கொண்டு வந்திருக்கேன்"னு சொன்னதும் சிவாஜி ஆவலா திறந்து ஒரு துண்டை எடுத்து வாயில் போடுவார். கதைப்படி பொதுவா காதலர்கள் சந்திக்கும் போது கிஃப்ட், பூ, பொக்கே, தாஜ்மஹால்னு தான் காட்சி வைப்பார்கள். ஆனா இயக்குனர் சிவாஜி என்கிற தனி மனிதன் எதை விரும்புகிறார்னு தெரிந்து காட்சி வைத்ததாக தோன்றும். மான்கறி டேஸ்ட் பண்ணி கோயிலில் சாப்பிடுற மாதிரி காட்சி வைத்தும் சிவாஜி அதில் எந்த அப்ஜெக்ஷனும் சொல்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். நேபாளி பூசாரி சிகரெட் பிடிச்சுக்கிட்டே பிரசாதம் கொடுக்கிறான்னு ஒரு நக்கல் வேறு. காட்சியின் முக்கியத்துவம் இயக்குனர் முக்தாவுக்கே வெளிச்சம். அங்கே மீனு. இங்கே மானு.

'சந்திப்பு' படத்தில் சிவாஜி ஒரு பாக்ஸர். அவரை மனோரமா விரும்புவார். சிவாஜி ப்ராக்டிஸ்ஸில் இருக்கும் போது மனோரமா ஒரு டப்பாவை கொண்டு வந்து கொடுப்பார். "ராசா...உனக்காக நானே போய் மார்க்கெட்ல பார்த்து வாங்கி முந்திரி, திராட்சைலாம் போட்டு பூ மாதிரி செஞ்சிருக்கேன்"

"என்ன கறி?"

"பெரியாட்டுக்கறி..சாப்பிடு"ன்னு சொன்னதும் சிவாஜி ஒரு துண்டு எடுத்து வாயில் போடுவார். "என்ன ஆடு...ஓரே இழுவையா இருக்கு"ன்னு சிவாஜி கேட்டதும் மனோரமா "அது பெரியாட்டுக்கறி"ன்னு சொல்வார்.

"என்ன தான் பெரிய ஆடுன்னாலும் இப்படி இருக்காதே"ன்னு சிவாஜி சொன்னதும், "ராசா....அது மாடு"ன்னு சொல்வார்...

"ச்சீ...கருமம்....பழக்கமில்லாததை திங்கச் சொல்றியா"ன்னு சிவாஜி கோபித்துக்கொள்ளும் காட்சியில் அவர் ரியாக்ஷன் செமயா இருக்கும். இந்த காட்சியை கூட ஏன் வைத்தார்னு இயக்குனர் சி.வி.ராஜேந்திரனுக்கு தான் தெரியும். மானையும், மீனையும் ரசித்து ருசித்து நடித்த சிவாஜி மாடு என்றதும் தூக்கி எறிவது போல நடித்தது கூட அவருக்கு Beef பிடிக்காது என்பதை வலியக் காட்டக்கூட இருக்கலாம். சிவாஜியின் சொந்தத்தயாரிப்பு தான் அந்தப்படம். இதேப்போல 'இமைகள்' படத்தில் சிவாஜி ஒருஇஸ்லாமியர். அவருக்கு சரிதா சாப்பாடு பரிமாறுவார்.

"உங்களுக்கு கருவாடு பிடிக்கும்னு கருவாட்டுக்குழம்பு, மொச்சைக்கொட்டை போட்டு செஞ்சிருக்கேன். கூடவே ரெண்டு வாத்து முட்டை வறுத்திருக்கேன்"னு சொல்வார். சிவாஜி வாத்து முட்டையும் சாப்பிடுவார்னு இந்தக்காட்சியில் விளங்கிடும். உயர்ந்த மனிதனில் சிவாஜிக்கு சிவக்குமார் சமைத்துக்கொடுத்து அதை அவர் சாப்பிடும் அழகு...உண்மையா சாப்பிடுபவன் தோற்று விடுவான்.

சிவாஜி பற்றி பேட்டிக்கொடுக்கும் எல்லோரும் அன்னை இல்லம் பற்றியும், அங்கு சாப்பிடும் சாப்பாடு பற்றியும் சொல்லாமல் இருந்ததில்லை. மோகன் ராம் சாய் வித் சித்ரா பேட்டியில் சிவாஜி வீட்டு சாப்பாடை சொல்லும் போது நான் நாக்குல ஜலம் விட்டதெல்லாம் வேற லெவல்...

சாப்பிட்டு வாழ்ந்திருக்கார்யா மனுஷன்....

Tags:    

Similar News