Manju Warrier Daughter Meenakshi Age- நடிகை மஞ்சு வாரியருக்கு இவ்ளோ பெரிய பொண்ணா..?
இன்னும் இளமையை ஏந்திக்கொண்டிருக்கும் 44 வயது நடிகை மஞ்சு வாரியருக்கு 23வயதில் மகள் இருக்கிறார் என்பதை ரசிகர்கள் நம்ப மறுக்கின்றனர்.
Manju Warrier Daughter Meenakshi Age
மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட்டில் அசுரன் படத்தின் மூலம் தமிழுக்கு அடியெடுத்து வைத்த நிலையில், கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அஜித்- ன் துணிவு படத்திலும் செம நடிப்பில் தூள் கிளப்பி இருந்தார்.
Manju Warrier Daughter Meenakshi Age
அவருக்கு வயசு 44. ஆனாலும் யாரும் சொன்னால் நம்பமுடியாத அளவில் இன்னும் இளமையை தக்கவைத்துள்ளார். இன்னும் சினிமா உலகில் முக்கிய நடிகையாக வலம் வருவது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
துணிவு படத்தில் நடிகர் அஜித்துக்கு இணையாக இரண்டாவது ஹீரோவாகவே ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைத்திருந்தார் மஞ்சு வாரியர். மலையாள நடிகர் திலீப் உடன் திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியருக்கு 23 வயதில் மீனாக்ஷி எனும் அழகிய மகள் இருக்கிறார் என்பது கோலிவுட் ரசிகர்களை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆமாம்ங்க மஞ்சு வாரியாருக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று எல்லோருக்கும் ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
Manju Warrier Daughter Meenakshi Age
டீன் ஏஜில் சினிமாவுக்கு வந்த மஞ்சு
மஞ்சு வாரியர் தனது 17 வயதில் சினிமா நடிகை ஆனார். தனது 17 வயதிலேயே மலையாள படமான சாக்ஷ்யம் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். மலர்ந்த மல்லிகைப்போன்ற மஞ்சு வாரியருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. சல்லாபம், தூவல் கொட்டாரம், தில்வாலா ராஜகுமாரன் என ஆரம்பத்தில் அதிகமாக திலீப் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்தார்.
காதல் திருமணம்
நடிகர் திலீப்பை காதலித்து வந்த மஞ்சு வாரியர் 1998ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கொஞ்ச வருடங்களிலேயே திலீப்புக்கும் இவருக்கும் இடையே பல பிரச்னைகள் எழுந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார், மஞ்சு வாரியர்.
Manju Warrier Daughter Meenakshi Age
இன்னும் இளமையாக
மாறாத இளமையுடன் அசுரன், துணிவு படங்களில் நடிகை மஞ்சு வாரியரை பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு அவருக்கு 44 வயதாகிறதா என்பதே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாறாத அழகு கொண்ட மலையாள மங்கையாக இருக்கிறார், மஞ்சு வாரியர்.
பாலியல் வழக்கு விசாரணை
பிரபல தென்னிந்திய நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய காரணமாக இருந்ததாக மஞ்சு வாரியரின் முன்னாள் கணவர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையிலும் இருந்தார். அவர் மீது அந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக மஞ்சு வாரியரிடமும் விசாரிக்கப்பட்டது. கணவருக்கு எதிரான சாட்சிகளை மஞ்சு வாரியர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அதெல்லாம் இப்போது நமக்குத் தேவையும் இல்லை.
Manju Warrier Daughter Meenakshi Age
ஆக்ஷன் ஹீரோயினி
பொதுவாகவே பெரிய நடிகர்கள் தங்களுக்கு இணையான கேரக்டர்களை ஹீரோயின்களுக்கு கொடுப்பதை விரும்பமாட்டார்கள். அஜித்துக்கு இணையாக முன்னணி நடிகர்கள் ஹீரோயின்களுக்கு இணையான ஸ்பேஸ் கொடுப்பது ரொம்பவே பெரிய விஷயமாக சினிமாத் துறையில் பார்க்கப்படுகிறது. வலிமை படத்தில் ஹூமா குரேஷி எப்படி நடித்து இருந்தாரோ, அதே போல துணிவு படத்திலும் மஞ்சு வாரியருக்கு அஜித்துக்கு இணையான ரோல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்துடன் பைக் டூர்
நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்திருந்த நிலையில், படப்பிடிப்பின் போதே நடிகர் அஜித் உடன் பைக் டூர் சென்று வந்தார். மேலும், சமீபத்தில் அஜித்திடம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்றும் பிரத்யேக போட்டோக்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
23 வயது மகள்
ஜோதிகா தமிழில் நடித்த 36 வயதினிலே திரைப்படம், மஞ்சு வாரியர் நடித்த How Old Are You படத்தின் ரீமேக் தான். நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியருக்கு திருமணம் ஆன ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அந்தக்குழந்தைக்கு மீனாக்ஷி என பெயர் வைக்கப்பட்டது. அந்தக்குழந்தை வளர்ந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆமாம், இப்போது அந்த பெண்ணுக்கு 23 வயதாகிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
Manju Warrier Daughter Meenakshi Age
அம்மாவின் ஜெராக்ஸ்
மீனாக்ஷி, அம்மா மஞ்சு வாரியர் உடன் இல்லை. அவர் அப்பா திலீப் உடன் வாழ்ந்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மாவைப் போலவே இருக்கிறாரே.
மஞ்சு வாரியரை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கிறார் என்று துணிவு படத்தின் ரிலீசுக்கு பிறகு அந்த போட்டோக்களை தேடி எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். மகளுக்கு போட்டியாக அம்மாவும் அதே இளமையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.