நடிகர் துல்கர் சல்மான் எடுத்த அதிரடி முடிவு: ஷாக்கான ரசிகர்கள்

இனி காதல் படங்களில் நடிக்கப்போவதில்லை, கமர்ஷியல் மற்றும் ஆக்சன் படங்களில் கவனம் செலுத்தப்போவதாக நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்;

Update: 2022-07-28 07:56 GMT

மலையாள நடிகர் துல்கர் சல்மான், 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார் மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் பாலிவுட் என அனைத்திலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் துல்கர்.

மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும், துல்கர் இன்று தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் துல்கர் சல்மான்.

இந்நிலையில் அவரின் அடுத்த படமான சீதா ராமம் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துல்கர் சல்மான் ஒரு பேட்டியில், தான் இனி காதல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், கமர்ஷியல் மற்றும் ஆக்சன் படங்களில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் காதல் படங்கள் தான். ரசிகர்களால் அவர் நடித்த காதல் படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இனி காதல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவெடுத்தபோது, சீதா ராமம் படத்தின் இயக்குனர் இப்படத்தின் கதையை கூறியுள்ளார்.

சற்று வித்யாசமான காதல்கதையாக இருந்ததால் சீதா ராமம் படத்தில் நடிக்க துல்கர் ஒப்புக்கொண்டதாக கூறினார். மேலும் இனி கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார் துல்கர். 

Tags:    

Similar News