அனிருத் கேட்ட சம்பளத்தால்… ஆடிப்போன லைகா நிறுவனம்..!
லைகாவின் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் இரண்டு படங்களுக்கு இசையமைக்க அனிருத் கேட்ட சம்பளத்தால் லைகா வாயடைத்துப் போயுள்ளது.
தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியத் திரையுலகிலும் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் உறவினர், முன்னணி கதாநாயகர்களால் பரிந்துரை செய்யப்படும் இசையமைப்பாளர் அனிருத். இவர், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த, விஜய், அஜித் குமார், தனுஷ், சூர்யா என முன்ன்ணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார்.
இவர், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டு படங்களுக்கும் இசையமைக்க பத்து கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு லைகா நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் விஜய் நாயகனாக நடித்து வெளியான 'கத்தி' திரைப்பத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் தடம் பதித்தது. லைகா புரொடக்ஷன்ஸ் இதுவரை பதினைந்து திரைப்படங்களை நேரடியாகவும் கூட்டுத் தயாரிப்பிலும் முதல் பிரதி அடிப்படையிலும் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆனாலும், இதுவரை எந்த ஒரு திரைப்படமும் பன்படங்கு லாபத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு பெற்றுத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை வைத்து திரைப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், தனுஷ், சூர்யா, நடிகை நயன்தாரா உள்ளிட்டோருக்கு அவர்கள் நடிக்கும் படங்களின் வணிக மதிப்புக்கு சம்பந்தமில்லாமல் அதிகமாக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் தொழில் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் அவர்களைப் போன்று அதிக சம்பளம் கொடுக்க முடியாமல், விருப்பமும் இல்லாமல் தயாரிப்புத் தொழிலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் வெள்ளித் திரைகளில் வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பன்மடங்கு லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. இப்படத்தை இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கக் கேட்ட சம்பளத்தால், லைகா நிறுவனம் ஒரு கணம் ஆடிப்போய்விட்டது என்பதுதான் கோலிவுட் ஏரியாவின் பரபரப்பு பேச்சாகப் பற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது,
தற்போது, பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் - 2', சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்', இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தித் திரைப்படமான நடிகர் ஷாருக்கானின் 'ஜவான்' ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். ஒரு படத்துக்கு இசையமைக்க அனிருத் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.
அண்மையில், அனிருத் இசையமைத்த திரைப் படங்கள் வெற்றி பெற்றதன் மூலமும் பாடல்கள் பெருவாரியான வரவேற்பைப் பெற்றன என்பதாலும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம் அனிருத் ரவிச்சந்திரன்.
இந்தநிலையில், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினி காந்த்தை வைத்து இரண்டு புதிய திரைப்படங்களை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவ்னம் தயாரிக்கும் இரண்டு படங்களுக்கும் இசையப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், தலா ஒரு படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் வீதம் இர்ண்டு படங்களுக்கு இசையமைக்க பத்து கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டுள்ளார். இந்த சம்பளத்தில் இருந்து கொஞ்சமும் குறைத்துக் கொள்ள முடியாது என்றும் மிகவும் கறாராகச் சொல்லிவிட்டாராம் அனிருத்.
அனிருத்தின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டனராம். ஆனாலும் வேறு இசையமைப்பாளர்களைத் தேடிச் செல்வதைக் காட்டிலும் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தைக் குறைக்கச் செய்யலாம் என்கிற முடிவில் இருக்கிறதாம் லைகா புரொடக்ஷன்ஸ்