ராசியில்லா ராஜாவா கமல்..?
கமல் அரசியலில் ஒரு ராசி இல்லா ராஜாவோ என்று எண்ணத்தோன்றினாலும் அவர், ஒரு எவர் ஸ்டார்.
களத்தூர் கண்ணம்மா தொடங்கி..இந்தியன் வரையிலும் கமலின் சினிமா சாதனைத்தடங்களை லேசாக விட்டுவிட முடியாது. நடிப்பு,நடனம், நகைச்சுவை என்று எதிலும் தனித்தன்மை காட்டும் வல்லவர். நடிப்பதே தெரியாத ஒரு நடிப்பு.உலக சினிமா குறித்து தெளிந்த பார்வையுடைவர். ஆழ்ந்த சிந்தனை ஆற்றலும் உள்ளவர்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பரிமாணம். அன்பே சிவம் படமெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத நடிப்பு. சலங்கையொலி, தசாவதாரம், ஔவை சண்முகி, இந்தியன், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன,காம,ராஜன், தெனாலி, நாயகன்,குணா, குருதிப்புனல், விருமாண்டி, ஹேராம் என ஏராளமான படங்கள் உள்ளன. அத்தனையும் தனித்தனி விதம்.
அவரது அழகு, நடனம்,நடிப்புக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. குறிப்பாக இளைஞனாக இருந்த காலத்தில் கல்லூரி மாணவிகளின் கனவு நாயகனாக விளங்கினார். இப்படி நடிப்பில் கோலோச்சிய கமலுக்கு சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட கசப்புகள். முதல் மனைவி வாணி 1988 வரை வாழ்ந்த பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
பின்னர் சரிகா மனைவியானார். அவருக்குப் பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசனும், அக்ஷராஹாசனும். 2004ம் ஆண்டு சரிகாவும் கமலை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின் கௌதமி லிவ் டூ கெதர் தோழியாக வாழ்ந்தார் . அவருக்கும் கமலுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துபோனார்கள்.
கமல் ஒரு ஆராய்ச்சியாளர். சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்து பரிசோதனை செய்பவர். அதனால் பெரிதாக ஒன்றும் கையில் இல்லாமல் போனது. எல்லா நடிகர்களைப்போலவே, கமலுக்கும் அரசியல் ஆசை வந்தது. அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு அவரை வரவேற்றனர். மக்கள் நீதி மய்யம் உருவாகியது. அவர் சென்ற இடமெல்லாம் கூட்டம் கூடியது. அவரே உற்சாகமாகிப்போனார். தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார்.
ஆனால், அவரைப்பார்க்க கூடிய கூட்டம் அவருக்கு வாக்களிக்க மறந்து போனார்கள். கோவையில் கடைசி வரை போராடினார். இழுபறியாக சென்ற வாக்கு எண்ணிக்கை கடைசியில் அவரை கைவிட்டது. இல்லை.. இல்லை.. அவர் கைவிடப்பட்டார். கமல், ஒரு ராசி இல்லா ராஜாவோ…?
No, He is a Big boss.