இருவர் படம் எந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

Update: 2024-06-19 12:27 GMT

மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். நிகழ்கால அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட படம் இது. மோகன்லால், பிரகாஷ்ராஜ் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பார்கள். மோகன்லால் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருப்பார். ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருப்பர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் முதலில் கமல்ஹாசன், சத்யராஜ், மிதுன் சக்ரவர்த்தி, அரவிந்த் சாமி, மம்மூட்டி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களையெல்லாம் தாண்டிதான் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

எந்த ஓடிடி?

இருவர் படம் எந்த ஓடிடியில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் எனத் தெரிகிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய படமான இருவர் அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இப்போதே இலவசமாக பார்க்க கிளிக் செய்யுங்கள்.

இருவர் படத்தை ஓடிடியில் இலவசமாக காண இதைக் கிளிக் செய்யுங்கள்.

இதுதான் கதை

1940களின் பிற்பகுதியில், மெட்ராஸில் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்க போராடும் ஓர் இளைஞன் ஆனந்தன். திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர் தமிழ்ச்செல்வனைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது. தமிழ்ச்செல்வனின் சிறந்த எழுத்தாற்றலும் ஆனந்தனின் நடிப்பாற்றலும் இணைந்து, அவனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தருகிறது.

தமிழ்ச்செல்வன், ஆனந்தனை திராவிட அரசியல் கட்சியின் தலைவரான ஐயா வேலுத்தம்பிக்கு அறிமுகப்படுத்துகிறான். திராவிட இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும் ஆனந்தன், புஷ்பவல்லியை மணக்க, தமிழ்ச்செல்வன் மரகதத்தை மணக்கிறான். மெட்ராஸ் திரும்பிய ஆனந்தனுக்கு, அவன் நடிக்கவிருந்த படம் நிதி சிக்கலில் கைவிடப்பட்ட செய்தி காத்திருக்கிறது. சில மாதங்களில் தமிழ்ச்செல்வனின் கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுக்க, ஆனந்தனின் திரை வாழ்க்கை சிறு வேடങ്ങളில் சுருங்குகிறது.

ஆனந்தனுக்கு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, திரைக்கதை ஆசிரியராக தமிழ்ச்செல்வனை நியமிக்கிறான். திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து, ஆனந்தன் சில ஆண்டுகளில் முன்னணி நட்சத்திரமாகிறான். தமிழ்ச்செல்வன், ஆனந்தனை அரசியலில் ஈடுபடுத்தி கட்சிக்கு வெற்றியை தேடித்தர எண்ணுகிறான். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட நடிகை ரமணியை மணக்கிறான் ஆனந்தன்.

அரசியலும் சினிமாவும்

ஐந்து ஆண்டுகள் கழித்து, ஐயா வேலுத்தம்பி, ஆனந்தனை தேர்தலில் போட்டியிட அழைக்கிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஆனந்தன் காயமடைந்தாலும், கட்சி 152 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. முதலமைச்சராக ஆனந்தனை தேர்வு செய்ய வேலுத்தம்பி விரும்ப, ஆனந்தனின் ஆதரவுடன் தமிழ்ச்செல்வன் முதல்வராகிறான்.

தமிழ்ச்செல்வனின் ஆட்சியில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறான் ஆனந்தன். ஐயா வேலுத்தம்பியின் மறைவிற்கு, கட்சியின் ஊழலே காரணம் எனக் குற்றம் சாட்டி கட்சியை விட்டு வெளியேறுகிறான். பல உறுப்பினர்கள் ஆனந்தனின் பின்னால் செல்ல, கட்சி இரண்டாக உடைகிறது.

அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழ்ச்செல்வன் அரசின் ஊழல்களை தனது திரைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தி, அடுத்த தேர்தலில் 145 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கிறான் ஆனந்தன். ஆனால் அவனது ஆட்சியும் ஊழலில் சிக்க, தமிழ்ச்செல்வனை கைது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதனிடையே, விபத்தில் கல்பனா இறக்க, ஆனந்தன் மனம் உடைகிறான்.

ஐயா வேலுத்தம்பியின் பேத்தி திருமணத்தில், நோய்வாய்ப்பட்ட ஆனந்தன் தமிழ்ச்செல்வனை சந்தித்து கைகுலுக்குகிறான். அடுத்த நாள் காலையில் ஆனந்தன் உயிரிழக்கிறான். தமிழ்ச்செல்வன், ஆனந்தனின் நினைவுகளைப் பற்றி கவிதை பாடி அவனது இழப்பிற்கு வருந்துகிறான்.

Tags:    

Similar News