Havells celebrates Onam-ஓணம் பண்டிகையை Havells நிறுவனம் இப்படித்தான் கொண்டாடுகிறது..!

மலையாள மக்களின் பிரபலமான ஓணம் பண்டிகையை Havells நிறுவனம் மோகன்லால் மற்றும் அனுஸ்ரீ ஆகியோரின் விளம்பரப்படங்கள் மூலமாக கொண்டாடுகிறது.;

Update: 2023-08-11 07:42 GMT

Havells celebrates Onam in Tamil-மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை அனுஸ்ரீ (கோப்பு படம்)

Havells celebrates Onam in Tamil, Havells celebrates Onam with Mohanlal and Anusree, Havells Refrigerator, Havells Washing Machine, Onam Festival 2023

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை அனுஸ்ரீ ஆகியோரின் பங்கேற்புடன் ஹேவெல்ஸ் ஒரு பண்டிகை கால பிரசாரத்தை துவங்கியுள்ளது. அந்த இரண்டு விளம்பர படங்களும் மெக்கனால் கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டது.

அந்த படத்தில் மோகன்லால் மற்றும் அனுஸ்ரீ ஆகியோர் திருமணமான தம்பதிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பெண்மையின் உணர்வை பிரதிபலிக்கும் நுட்பமான செய்தியை சின்ன சின்ன செய்கைகள் மூலமாக நமக்கு உணர்த்துகின்றன.


முதல் படம் 

முதல் படத்தில், அனுஸ்ரீ மறுநாள் அணிய திட்டமிட்ட ஆடையில் கறை படிந்ததால் ஏமாற்றம் அடைகிறார். மோகன்லால்,மனைவியின் துயரத்தைப் பார்த்து, அந்த ஒரே இரவில் ஆடையைத் தூய்மை செய்து அவளின் சோகத்தை போக்க எண்ணுகிறார்.

தானே  அந்த கறைபடிந்த ஆடையை துவைத்து சுத்தமாக்கி தன் மனைவிக்கு எல்லாவற்றையும் தயார் செய்து வைக்கிறார். அன்றைய காலை பொழுதை மனைவிக்கு மகிழ்ச்சியாக்கினார். தனது செயல் மூலமாக  தனது  மனைவியை ஆச்சரியப்படுத்தினார்.

இரண்டாவது படம் 

இரண்டாவது விளம்பரப் படத்தில் தம்பதியினர் வீடியோ காலில் பேசுகின்றனர். மோகன்லால் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். பேசியவாறே மனைவி அனுஸ்ரீ வேலையிலிருந்து வீடு திரும்புகிறார். மோகன்லால் மனைவியிடம் இரவு உணவைப் பற்றி விசாரிக்கிறார். அதற்கு மனைவி இப்போது சமைப்பதற்கு நேரம் இல்லை. உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம். இல்லையென்றால் எதுவும் கிடைக்காது என்று மனைவி அனுஸ்ரீ பதிலளிக்கிறார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த மோகன்லால், போய் குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சொல்கிறார். மனைவி அனுஸ்ரீ ஒரு சந்தேகப்பார்வையுடன் குளிர்சாதனப்பட்டியைத் திறக்கிறார். அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவரது கணவன் தனக்காக இரவு உணவு தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பதை அவள் கண்டு மகிழ்கிறார்.


ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜேஷ் ரதி கூறுகையில்,

"ஓணம் பண்டிகையின் போது 'கயால்' மற்றும் 'குஷி' ஆகிய பிராண்ட் நெறிமுறைகளைக் கொண்டாடும் எங்கள் பிரசாரத்தை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் லாயிட் எஸ்டெல்லோ வாஷிங் மெஷின் மற்றும் லாயிட் குளிர்சாதன பெட்டியின் சிறந்த-இன்-கிளாஸ் அம்சங்களை இந்த விளம்பரப்படம் ஆக்கப்பூர்வமாக காட்டுகிறது. வளர்ந்துவரும் நிலையில், சலவை இயந்திரம் மற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற தயாரிப்புகள் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன் புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இரண்டாவது விளம்பரப் படத்தை இந்த இணைப்பை 'க்ளிக்' செய்து பார்க்கலாம்.

https://youtu.be/mnEQpvXsh4Q

முதல் விளம்பரப் படத்தை இந்த இணைப்பை 'க்ளிக்' செய்து பார்க்கலாம் 

https://youtu.be/40az1JH9c9c

Tags:    

Similar News