‘‘டிவி’’ சீரியல்களின் வளர்ச்சி: முக்கிய காரணம் யார்?
‘‘டிவி’’ சீரியல்கள் அதிரடியாக வளர்ச்சி அடைய நடிகை ராதிகாவே காரணம் என விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியுள்ளார்.;
மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ். ‘‘டிவி’’ நாடகங்களை அதாவது சீரியல்களை அபாரமாக வளர்த்து, தமிழ் சமுதாயமே டிவி பெட்டிக்குள் முடங்க முக்கிய காரணமே ராதிகா தான் என்று அதிரடியாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகவேல் எம்.ஆர். ராதாவின் மகள் ராதிகா. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு பத்தாண்டு காலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கதாநாயகியாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை 2001-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.
அதுமட்டுமில்லாமல், சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ராதிகா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நமது தமிழ்ச் சமுதாயமே ‘‘டிவி’’க்கு அடிமையாகிப் போனதற்கு போனதிற்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் டாக்டர் காந்தராஜ் 'ராதிகாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். கிழக்கு சீமையிலே படத்தில் எல்லாம் ராதிகாவின் நடிப்பு அருமையாக இருக்கும். எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவர் சூட் ஆவார். மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருப்பார். அந்த படமும் சரி, ராதிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும்.
டிவி சீரியல்களுக்கு புது உருவம் கொடுத்ததே ராதிகா தான். சித்தி என்ற ராதிகாவின் சீரியல் தான் சீரியலையே அறிமுகப்படுத்தியது . இன்றைக்கு நமது சமுதாயமே இதற்குள் மூழ்கி கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.
மேலும், “ராதிகாவின் சித்தி சீரியலைப் பார்த்து அடிக்டாகி இன்னமும் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம். சீரியல்களுக்கு பெரிய மார்க்கெட் கொடுத்ததே அவர் தான். தமிழ் சீரியல் உலகின் தாய் என்று ராதிகாவை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் என்றார்.