Ethir Neechal Promo-எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோ என்ன சொல்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் பிப்ரவரி 1ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.;

Update: 2024-02-01 11:53 GMT

ethir neechal promo-எதிர்நீச்சல் சீரியல் (கோப்பு படம்)

Ethir Neechal Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினியை காப்பாற்றுவதற்காக ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என நான்கு பேரும் அடியாட்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து ஒரு ஆண் இறங்கி வருகிறார். அதோடு தர்ஷினி தன்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பேப்பரில் தான் இருக்கும் இடத்தை எழுதி அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Ethir Neechal Promo

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பெண்கள் இப்போது செரும் சிங்கங்களாக மாறி இருக்கின்றனர். இதுவரைக்கும் வீட்டிற்குள்ளே அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்த பெண்கள் இப்போது பிரச்சனைகளுக்கு எதிராக தைரியமாக போராட தொடங்கி இருக்கின்றனர். அதிலும் தர்ஷினி காணாமல் போன பிறகு பெண்களுக்கு மன தைரியம் அதிகமாகி இருக்கிறது.

அதிலும் இப்போது சக்தி மருத்துவமனையில் இருப்பதால் ஆண் துணை இல்லாமலே தர்ஷனியை காப்பாற்றுவதையே குறியாக கொண்டு பெண்கள் தான் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் நேற்றைய எபிசோடில் தனக்கு பீரியட்ஸ் அதனால் பேட் வாங்க வேண்டும் என்று சொல்லி அதில் இங்கிலீஷில் தன்னை சில அடி ஆட்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள் காப்பாற்றுங்கள் என்று எழுதி அனுப்பி இருக்கிறார்.


Ethir Neechal Promo

அதுபோல ஏற்கனவே ஒரு பேப்பரில் தர்ஷினி தான் அடைக்கப்பட்டு இருக்கும் விபரத்தையம் எழுதி ரூமுக்கு வெளியே வீசி இருந்தார். இந்த நிலையில்தான் இன்று வெளியான ப்ரோமோவில் தர்ஷினியிடம் கடத்தி வைத்திருக்கும் அடியாள்களில் ஒருவன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போது தர்ஷினி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அதை கேட்டு கீழே இருந்த அடியாள்கள் என்னவென்று பார்க்க போகின்றனர்.

அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நான்கு பேரும் ஓர் இடத்தில் இருந்து இருந்து தண்ணீர் குடித்தபடியே பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் சில ஆண்கள் அவர்களிடம் தவறாக பேச அதற்கு ஜனனி கோபப்படுகிறார்.

பிறகு வாங்க அக்கா போகலாம் என்று காரில் ஏறும்போது அந்த ஆண்கள் பெண்களை அடிக்கின்றனர். அப்போது நான்கு பேரும் கையில் கிடைத்த ஆயுதங்களோடும் தனியாகவும் கூட அந்த ஆண்களிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் வருகிறது, அந்த காரில் இருந்து ஒரு நபர் இறங்குகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அந்த காரில் இருந்து இறங்குவது ஜீவானந்தமா? அல்லது கௌதமா? என்ற ஒரு பெரிய கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

ஏற்கனவே சீரியலில் கதாநாயகனாக இருக்கும் சக்தியை ஆக்சிடென்ட் ஆக்கி மருத்துவமனையில் இருப்பது போன்று கதையை மாற்றி விட்டு ஜீவானந்தம் ஹீரோவாக வந்து பெண்களுக்கு கடைசி நேரத்தில் துணையாக நிற்கப் போகிறாரா? இவர் தான் தர்ஷினியை காப்பாற்ற உதவி செய்யப் போகிறாரா என்ற கேள்விகள் இந்த ப்ரோமோவிற்கு கீழே கமெண்ட்களில் வருகிறது.

Ethir Neechal Promo

அதோடு கதாநாயகன் சக்தியை டம்மி ஆக்கிவிட்டு ஜீவானந்தம் இந்த இடத்தில் கதாநாயகனாக மாற இருக்கிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் காரில் இருந்து இறங்குவது ஒருவேளை ஜீவானந்தம் அல்லது கௌதம் இருவரும் இல்லை என்றால் சக்தியின் சித்தப்பா பையன் ராமசாமியாக கூட இருக்கலாம். அவர் அடியாள்கள் வைத்து ஜனனி குரூப்பை அடித்து மிரட்டுவதற்காக இப்படி ஒரு வேலை செய்து இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே தர்ஷினி கடத்தப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறை எங்க போனார்கள் என்று தான் தெரியவில்லை. ஆனாலும் நேற்றைய எபிசோடில் தர்ஷினியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதுபோல காரில் வரும்போது ஜனனி, இதுவரைக்கும் நாம் தைரியமாக முடிவெடுப்பதற்கு தகுந்த சூழ்நிலை கிடைக்காமல் இருந்தது. அப்படியே கிடைத்தாலும் நமக்கு நாமே முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தோம்.

Ethir Neechal Promo

ஆனால் இன்று வேறு வழியே இல்லை நாம் தான் நின்றாக வேண்டும் என்ற நிலைமை வந்தபோதுதான் நமக்குள் இருக்கும் திறமையும் தைரியமும் வெளியே வந்திருக்கிறது. இனி இதை நாம் தொடர வேண்டும் என்று மோட்டிவேஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதுவும் அப்போது நந்தினியின் நடிப்பும், விளக்கமும் வேற லெவலில் இருந்தது. ஆனால் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News