ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேவையில்லாதது: தம்பி ராமையா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது என நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.
கடலூரில் தனியார் தேநீர் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாஇன்று கலந்து கொண்டார். கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிறகு தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் என்பது தேவையில்லாது. இது தம்பி ராமையாவின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்.
மேலும் மனித உழைப்பு முழுவதும் ஈரோடு கிழக்குத்தொகுதியில் கொட்டி கிடக்கிறது. ஒரு தொகுதியை தவிர மற்ற 233 குழந்தைகளும் தாய் இல்லாத பிள்ளை போல் தத்தளிக்கின்றன. ஈவிகேஸ் இளங்கோவன் தான் அடுத்த எம்எல்ஏ அதனை திமுக, அதிமுக அல்லது பிறகட்சிகள் மறுக்க முடியுமா? என தெரிவித்தார். மேலும் மகன் உமாபதி நடிப்பில் தான் இயக்கி வரும் ராஜாக்கிளி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்றும் தம்பி ராமையா தெரிவித்தார்.