சினிமாவில் நடிகர்களுக்கு ஈகோ வந்தால் என்னவெல்லாம் பண்றங்க பாருங்க..
சினிமாவுல ஒரு நடிகருக்கும் இயக்குனருக்கும் ஈகோ பிரச்னை வந்தால் என்ன செய்வார்கள் என்று படித்துப் பாருங்கள்.
சினிமாவில் பணம் புழங்கும் அளவுக்கு 'கொழுப்பு' என்று சொல்வோமே அதைப்போல 'ஈகோவும்' ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நடிகர்கள் அல்லது நடிகைகள் ஈகோவால் பிரச்னை செய்தால் பல லட்சங்கள் வீணாகும். ஆனால்,அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.
பல நடிகர்கள் ஈகோ பிரச்சினைகளை வெளிப்படுத்த பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள். இயக்குனருடன் ஈகோ பிரச்னை வந்தால் விஜய் அமைதியாக இருந்துவிடுவார். இயக்குனருடன் மீண்டும் பேசவே மாட்டார். படம் முடிந்த பிறகு நிரந்தரமாக அவரிடம் இருந்து பிரிந்துவிடுவார்.
அஜீத்-க்கு ஈகோ வந்தால் தனது காரில் நாள் முழுவதும் அமர்ந்து சத்தமாக இசையைக் கேட்டுக்கொண்டு இருப்பார். உதவியாளர்கள் வெளியே வருமாறு கெஞ்சி சமாதானப்படுத்துவார்கள். கார்த்தியிடம் ஈகோ பிரச்சனைகள் இல்லை.அவர் மிகவும் ஜாலியாக இருப்பவர்.
விக்ரம் நேரடியாக இயக்குனரிடம் சண்டை போடுவார். இயக்குனரை வசைபாடுவார். ஆனால் 10 நிமிடங்கள் கழித்து மன்னிப்பு கேட்டுவிடுவார். விஜய் சேதுபதிக்கு ஈகோ பிரச்சனையே இல்லாத அளவுக்கு தொழில்முறை நடிகர். எல்லோரோடும் அனுசரித்து போய்விடுவார். சசிகுமார் ஏற்கனவே இயக்குனராக இருந்து அனைத்து டெக்னீஷியன்களையும் உணர்ந்தவர். அவரும் அனுசரித்து போய்விடுவார்.
ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஈகோ மூலம் பிரச்னைகளை கிளப்பி ஷூட்டிங்கை வீணடிப்பார்கள். தயாரிப்பாளர் செலவுகளை அதிகரிக்க சண்டை போடுவார்கள். தாய்லாந்துல ஷூட்டிங் வைக்கணும். அப்பதான் வருவேன் என்றெல்லாம் வதைப்பார்கள். அதில் கில்லாடி கிங் நம்ம சிம்பு தாங்க. நினைச்சா ஷூட்டிங் வருவாரு.இல்லைன்னா இல்லை.
ஈகோ பிரச்சனைகளுக்காக ஷூட்டிங்கை நாசப்படுத்துபவர்கள் வரிசையில் பாபி சிம்ஹாவும் இருக்கிறார். நன்றாக வளர வேண்டியவர். நல்ல,ஹீரோயிசம் இருந்தது. ஆனால், அவரது ஈகோ அவரை காணாமல் போகச் செய்துவிட்டது.
அதேபோல அதர்வா, அருண் விஜய் மற்றும் ரஜினிகாந்த் (ரஜினி பரவாயில்லை என்று சொன்னாலும் அவரது மேனேஜர் மூலம் தனது கோபம் தணியும் வரை ஷூட்டிங்கை தாமதப்படுத்துவார் என்று சொல்லப்படுகிறது. இப்போ ஒருவேளை மாறியிருப்பார்) இயக்குனர் மணிவண்ணன் ரஜினியின் கொடி பறக்குது படத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பராக நடித்தார். அந்த படத்தில் ரஜினியை விட மணிவண்ணன் கேரக்டர் சிறப்பாக இருந்ததால் ரஜினி அதை விரும்பவில்லை. அதனால் அந்த பாத்திர அமைப்பு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.