தனுஷும் வடிவேலுவும் சேர்ந்து நடிக்காததின் பின்னணி என்ன?
தனுஷும் வடிவேலுவும் சேர்ந்து நடிக்காததின் காரணம் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்கு இதுதான் காரணம், படிங்க.;
தனுஷ் மற்றும் வடிவேல்.
சுராஜ் இயக்கிய படிக்காதவன் படத்தில் தனுஷும் வடிவேலுவும் இணைந்து நடித்தனர். தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வடிவேலு வெளியேறினார்.
படப்பிடிப்பின் போது கடைசி நிமிடத்தில் வசனங்களை மாற்றியோ அல்லது புதிதாக சேர்த்தோ வடிவேலு பேசும் வழக்கம் கொண்டவர். கதாநாயகனும், இயக்குனரும் புதுமுகங்கள் என்றால் வடிவேலுவிடம் வாக்குவாதம் செய்ய மாட்டார்கள். வடிவேலுவின் மாற்றங்களுக்கு ஒப்புக்கொன்றுவிடுவார்கள்.
ஆனால், இயக்குனரோ, ஹீரோவோ சிறப்பானவர்களாக இருந்தால் மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். படிக்காதவன் படத்திற்கு முன் சுந்தர்.சி, சக்தி சிதம்பரம் போன்ற இயக்குனர்களுடனும் வடிவேலு சண்டை போட்டவர்தான்.
தனுஷுக்கும் அப்படித்தான் நடந்தது. ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்ட அதே வசனங்களை தனுஷ் விரும்பினார். ஆனால், வடிவேலு தனுஷுக்கு பிடிக்காத வசனங்களை மாற்றிக்கொண்டே இருந்தார். இறுதியில், வடிவேலு வெளியேற, வடிவேலுவுக்கு பதிலாக விவேக் வந்தார்.
தனிப்பட்ட முறையில் அந்த கதாபாத்திரத்தில் வடிவேலுவை நான் விரும்பினேன். ஏனென்றால் அந்த கதாபாத்திரம் அவருக்காகவே வடிவமைக்கப்பட்டது என்று இயக்குனர் சுராஜ் கவலை தெரிவித்திருந்தார்.