continuous cinema death-என்னடா.. இது? திரைத்துறைக்கு வந்த சோகம்..! அடுத்தடுத்து தொடரும் உயிரிழப்பு..!
continuous cinema death-சினிமாவில் தெடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவதை சிலர் அதிர்ச்சியாகவே பார்க்கின்றனர். அதற்கு காரணம்தான் என்ன?;
continuous death in cinema-கடந்த ஒரு மாதமாகவே திரைத்துறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் சில மரணங்கள் வயது முதிர்வு என்றாலும் சில அகால மரணங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.
இயக்குனர்கள் கே.விஸ்வநாத், டி.பி. கஜேந்திரன், இ. ராமதாஸ், பூ ராம்,பின்னணிப் பாடகி வாணிஜெயராம், நடிகர் மயில்சாமி என தொடர்ந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியடைய வைக்கிறது. நடிகர் விவேக் மரணம் கூட வேறுவிதம் என்றாலும் அவரும் இளம் வயதில் உயிரிழந்தவரே. அந்த வரிசையில் உயிரிழப்பு மலையாளம் சினிமாவையும் விடவில்லை. இப்போது கடைசியாக மலையாள காமெடி நடிகையும் டிவி தொகுப்பாளினியுமான சிபு சுரேஷ் 41 வயதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு கொச்சியில் இறந்துபோனார்.
சினிமாவில் மது மற்றும் புகைப்பது தாராளமாக நடக்கும் ஒரு சாதாரண சம்பவம். பொதுவாக சில இயக்குனர்கள் வசனங்கள் எழுதும்போது சிறிது மது அருந்துவார்கள். சிலர் அள்ளிக்குடிப்பதும் உண்டு. அதேபோலவே புகைப்பதும். இன்னும் சிலர் ஹாண்ஸ் மற்றும் பாண் பராக் போன்ற போதை வஸ்துக்களும் பயன்படுத்துவது நடந்து வருகிறது. நடிகர் மயில்சாமி இறந்துபோனது கூட மது பழக்கத்தால் கூட இருக்கலாம் என்று ஒரு மருத்துவர் கூறியிருக்கிறார்.
இயக்குனர் ராசு மதுரவன் ஒரு நல்ல திறமையுள்ள இயக்குனர். அவர் உயிரிழந்ததற்கு காரணம், அவர் எப்போதும் பாண் பராக் என்ற பாக்கு எப்போதும் வாயில் வைத்திருப்பார். அவரும் இளம் வயதிலேயே உயிரிழந்தவர்.
நா.முத்துக்குமார் பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவரும் மதுப்பழக்கத்தாலேயே மாண்டு போனவர். அவர் ஒரு சிறந்த இளம் கவி. மதுவால் நாம் ஒரு சிறந்த கவிஞனை இழந்துவிட்டோம். இப்படி பல துர்மரணங்கள் நம்மை துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
continuous death in cinema
நமது உணவு பழக்கவழக்கம் மற்றும் மது, சிகரெட் போன்ற பழக்கங்களால் உடல் சீர்கெட்டு சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாடு போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. அந்த ஆரோக்ய குறைபாடு பலருக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை அனைவரும் அவசியம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
சிலர், சினிமாவுக்கு என்னடா இது சோதனைக்காலமா..? தொடர்ந்து பிரபலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விடைபெற்று செல்கின்றனர் என்று அதிர்ச்சியாக பேசிக்கொள்கின்றனர்.
திரைத்துறையில் மட்டுமல்ல மற்ற எல்லா துறையினருக்கும் இது ஒரு எச்சரிக்கை. அதனால், உணவுக்கட்டுப்பாடு, மது மற்றும் புகைப்பதை அறவே நிறுத்த வேண்டும். நமது குடும்பத்திற்காகவாவது இந்த பழக்கங்களில் இருந்து நாம் மீண்டு வரவேண்டும். நாம் இல்லாமல் நம்மை இழந்து தவிப்பது நம் குடும்பம்தானே?