நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்த நாள்

1991 ல் இருந்து 1998 வரை தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த்சாமியின் 54 வது பிறந்த நாள் இன்று.

Update: 2021-06-30 02:23 GMT

நடிகர் அரவிந்த் சாமி

தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த் சாமியின் 54 வது பிறந்த நாள் இன்று

1991 ல் இருந்து 1998 வரை தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த் சாமியின் 54 வது பிறந்த நாள் இன்று. அன்றைய காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துன்பங்களிற்கு ஆளானார்கள். மாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது.

அரவிந்த்சாமி 30 ஜுன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம்தான் வளர்ந்தார்.

இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார்.


அரவிந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் எம் பி ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். அரவிந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழ் சினிமாவின் ஆணழகன் என்று வர்ணிக்கப்பட்ட இவர் தொடர்ந்து நடித்த பம்பாய், இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட நான்கு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார். 2013 ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் இயக்கத்தில் கடல் படம் மூலம் குணச்சித்திர நடிகராக காலடி பதித்த அரவிந்த்சாமி,தொடர்ந்து தமிழில் தனி ஒருவன் மற்றும் இந்தியில் டியர் டாட் போன்ற படங்களில் நடித்தார்.

Tags:    

Similar News