நடிகை 'ஆலியா பட்' மீது நெட்டிஷன்களுக்கு என்ன கோபம்..? ட்ரெண்டாகும் #BoycottAliaBhatt..!
BoycottAliaBhatt-நடிகை ஆலியா பட் ஆண்களுக்கெதிரான கருத்துக்களை படத்தில் கூறுவதன் மூலம் குடும்ப வன்முறையை தூண்டுகிறார் என்று நெட்டிஷன்கள் கொதித்துள்ளனர்.;
BoycottAliaBhatt-'டார்லிங்' படத்தில் நடிகை ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருப்பதாக நெட்டிசன்கள் கடுப்பாகி குடும்ப வன்முறையை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆலியா பட் தனது அடுத்த நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான 'டார்லிங்' -ஐ விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களில் பிஸியாக இருந்துவருகிறார். நாளை அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தற்போது ஆலியாவுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பு கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. டார்லிங் படத்தில் ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தூண்டுவது போல உள்ளதாக சிக்கல் கிளம்பியுள்ளது.
'டார்லிங்' திரைப்படத்தின் டீஸரில் ஆலியாவின் கதாபாத்திரம் தன் கணவனை ஒரு பாத்திரத்தில் அடிப்பது, முகத்தில் தண்ணீரை ஊற்றுவது, முகத்தை தண்ணீரில் மூழ்க வைப்பது, போன்ற கொலை முயற்சி செய்வதுபோல காட்சிகள் திட்டமிட்டுள்ளதுபோல தெரிகிறது.
அதனால். சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் என்பவர் இந்த படத்தை இயக்கி நடிகை ஆலியா பட் தயாரித்து, நடித்துள்ளார்.