Bigboss tamil Season 6: இந்த வாரம் இவர் தான் வீட்டை விட்டு வெளியேறப்போகிறாராம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து, இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.;

Update: 2022-11-29 07:14 GMT

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. முதல் 5 சீசன்களில் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு வாரமும் பரபரப்பு குறையாதபடி பிக்பாஸ் சீசன் 6 உள்ளது.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (ஏடிகே), ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி,மைனா நந்தினி என 21 நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்டனர் .

இதில் போட்டி துவங்கிய ஒரு வாரத்திலேயே ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த போட்டியாளராக ஜி.பி.முத்து இருந்து வந்தார். மேலும் இந்த சீஸனின் முதல் தலைவராகவும் தேர்வான ஜி.பி.முத்து,  தன் குடும்பத்தை பிரிந்து தன்னால் நிறைய நாட்கள் இருக்க முடியாது என்ற காரணத்தினால் வீட்டை விட்டு தானாக வெளியேறினார் .

இதையடுத்து சாந்தி மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று முதல் போட்டியாளராக வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அசல் கோலார், மஹேஸ்வரி, ஷெரினா, நிவாஷினி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினர்.

இந்நிலையில் இந்த சீசன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீசன் துவங்கியபோது இருந்த சுவாரஸ்யம் போக போக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக பரபரப்பான போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் குழு யோசித்துக்கொண்டு வருகின்றது.


சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்  நடைபெற்றது. இந்த ஓபன் நாமினேஷனில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இவர்களில் இந்த வாரம் கதிரவன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் வீட்டில் இதுவரை சும்மாதான் இருக்கின்றார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது அவர் நாமினேட் ஆகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் அவரை இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற்றிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

Tags:    

Similar News