இளம் ஹீரோ 'பிக்பாசில்' காதல் வளர்க்கப் போகிறார்..?
bigg boss tamil episode 6-பிக் பாஸ் குறித்த தினசரி செய்திகளில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.;
bigg boss tamil episode 6-பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் துவங்கும் முன்னரே அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி தினமும் ரெக்கை கட்டி பறக்கிறது. ஏற்கனவே 5வது சீசன் சொதப்பலானதற்கு பங்கேற்பாளர்கள் ஒருவரும் சிறப்பாக இல்லை என்ற தகவல் பரபரப்பானது. அதனால், அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபலங்களை பிக் பாஸ் வீட்டுக்கு கொண்டு வந்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார்கள்,இப்போது.
இப்போ, பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அதுவும் உறுதியாகிவிட்டது. பிக்பாஸ் சீசன்6-ஐ எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.
குக் வித் கோமாளி
இப்போது பரபரக்கும் செய்தி ஒரு இளம் ஹீரோ ஒருவரைப் பற்றியது. இந்த புது பேச்சு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் பற்றியது. இப்போ அஸ்வின் கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார்.
அவர் பிக் பாஸ் 6 வீட்டிற்கு போகப்போகிறார் என்று பேச்சு கிளம்பிரிச்சு. அஸ்வின் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இந்த சீசனில் அவரை வைத்து தான் காதல் கதையை பின்னப்போகிறார்கள் என்று பார்வையாளர்கள் கிளப்படுகிறார்கள்.
இதுவரை பிக் பாஸ் 6 வது சீசனுக்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் பெயர் இறுதிப் பட்டியலில் வந்தால் மட்டுமே முழுவதுமாக நம்பலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது இல்லையோ தினமும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து அனுப்பும் பொறுப்பான வேலையை பார்வையாளர்கள் சிறப்பாக செய்து யார் பெயரையாவது அடிபட வைப்பது வழக்கமாகிவிட்டடது.
டிடி
bigg boss tamil episode 6-பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க காலத்தில் இருந்தே பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாவது வழக்கம். வழக்கம்போலவே டிடியும் இதில் கலந்துகொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிடியும் அதை கண்டுகொள்வது இல்லை. ஆனால், இந்த சீசனில் கலந்துகொள்ளப் போகிறார் என்கிறார்கள்.