bigg boss 6 tamil latest news-ரகசியம்ங்க..பிக் பாஸ் வீட்டுக்குள் விவாகரத்து நடிகரால் ஒரு லவ் ஸ்டோரி உண்டாமுங்கோ..!!
Bigg Boss Tamil Season 6-பிக்பாஸ் வீட்டுக்குள்ள விவாகரத்து பெற்ற நடிகர் ஒருவர் வரப்போகிறாராம். அதனால வீட்டுக்குள் ஒரு அழகான காதல் கதை ரெடியாகிவிட்டது என்று பரபரத்துக் கிடக்கின்றனர்,ரசிகர்கள்.
Bigg Boss Tamil Season 6-அது என்னமோ தெரியல..என்ன மாயமோ தெரியல..பிக் பாஸ்ன்னா ஒரு பகீர் செய்தி அடிக்கடி பரவிக்கிட்டு இருக்குது. அட ஆமாங்க..எப்போ பார்த்தாலும் பிக் பாஸ் ஒரு பரபரப்பாவே இருக்குதுங்க. நாமளும் ஏதாவது ஒரு சின்ன சேதி சிக்காதான்னு நைட்டுல முழிக்கிற ஆந்தை கணக்கா தேடிக்கிட்டு இருக்கோம். கிடைச்சதை சும்மா விட்டுடுவோமா என்ன..?
அட ஆமாங்க.. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை முதல்(9ம் தேதி) ஆர்ப்பரிப்போட துவங்கப்போகுது. ஏற்கனவே சொன்னமாதிரி நம்ம கமல்ஹாசன் சார் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த 6வது சீசன் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்கப்போறாங்கன்னு ரசிகர் மத்தியில தனி பட்டிமன்றமே நடந்து முடிஞ்சுது. அதுவும் பங்கேற்பாளர்கள் குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. இப்போ, நாளைக்கு நிகழ்ச்சியும் துவங்கப்போகுது.
bigg boss 6 tamil latest news
அந்த வகையில் எல்லோருக்கும் அறிமுகமான பல பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் கலந்து கொள்ளப் போறாங்க. அதே நேரத்தில நாம எதிர்பார்க்காத ஆளுங்களும் களம் இறங்கலாம். அதிலும் பல சர்ச்சை பிரபலங்களும் உள்ளுக்குள் இருந்தால்தான் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்பதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பல திட்டமிடுதல்களுடனேயே இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளனர்.
லவ் இல்லாத வாழ்க்கை சுவைக்குமா..? அதுபோல ஒவ்வொரு வருட பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு காதல் கதை கண்டிப்பாக இருக்கும். அதுதான் நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். அந்த வகையில் தற்போது விவாகரத்து பெற்ற நடிகர் ஒருவர் இந்த போட்டியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விவாகரத்து வாங்கியவர் என்றால் நிகழ்ச்சிக்குள்ள ஒரு காதல் கண்டிப்பாக மலரும் என்கிறார்கள் ரசிகர்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' போன்ற சில சீரியல்களில் நடித்தவர் நடிகர் அசீம்.
அதே தொடரில் நடித்த சிவானியுடன் இவர் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். சிவானிக்காகத் தான் அவர் தன் மனைவியையே விவாகரத்து செய்தார் என்றெல்லாம் கூட தகவல்கள் பரவின. அதனாலேயே சிவானி கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை வைல்ட் கார்டு போட்டியாளராக இறக்க விஜய் டிவி திட்டமிட்டது.
bigg boss tamil season 6
ரசிகர்களும் இவரது வரவை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் சில தடங்கல்களின் காரணமாக அந்த காலகட்டத்தில் அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவர் நழுவ விடுவாரா என்ன..? 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்டார். தற்போது நடிகர் அசீம் இந்த சீசனில் அசத்தல் என்ட்ரி கொடுக்கப்போறாருங்கோ..!
படு ஸ்டைலிஷ்ஷா, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளிவருகிறார். சொல்லிவைத்தாற்போல இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இருக்கின்றனர். அப்புறம் சொல்லவா வேண்டும், ரொமான்ஸ் பண்ணுவதற்கு? பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு காதல் மன்னனாக கதை,திரைக்கதை எல்லாம் உருவாக்கப்பட்டு முடிச்சாச்சு என்கிறார்கள் ரசிகர்கள்.
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரைச் சுற்றி ஒரு லவ் ஸ்டோரி உருவாகும் என்பதில் நோ டவுட் மக்கா..! நோ டவுட் மக்கா..!நோ டவுட் மக்கா..! (இது விவேக் ஸ்டைல்)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2