சென்னை கொண்டு வரப்பட்டது பவதாரணி உடல்

சென்னை விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.;

Update: 2024-01-26 11:28 GMT

பவதாரிணியுடன் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

பவதாரணி உடல்நலப் பாதிப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

அவரது உடல் இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வுக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பவதாரணி உடல் அங்கிருந்து இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்து, பவதாரிணி உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்திலிருந்து பவதாரணி உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.

பிறகு, இன்றிரவு சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று இளையராஜாவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்து, பவதாரிணி உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News