Avatar 2 Trailer Tamil-அவதார்2 ட்ரைலர்..! பார்த்தீங்களா?
உலக அளவில் மிக பிரமாண்ட வசூல் செய்த படம் அவதார். அந்த படத்தின் 2ம் பாகம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான ட்ரைலரும் வந்துவிட்டது.;
avatar 2 trailer tamil-அவதார் 2 ட்ரைலர் (கோப்பு படம்)
Avatar 2 Trailer Tamil
கடந்த 2009ம் ஆண்டு மோஷன் பிக்சர் தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக வெளியான அவதார் திரைப்படம். இது 25000 கோடி வசூல் செய்து உலகின் நம்பர் ஒன் வசூல் வேட்டை நடத்திய படமாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகி ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. அதன் பின்னர் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுத் தான் அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. அந்த அளவுக்கு வியப்பின் உச்சமான அவதார் படத்தின் அடுத்த பாகம் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியாகிறது.
Avatar 2 Trailer Tamil
ஜேம்ஸ் கேமரூனின் கனவு
ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக் படங்களை இயக்கி ஒட்டுமொத்த உலகத்தையும் அசந்து பார்க்க வைத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் படைப்பின் உச்சமாகவே மாறியது. அதன் பின்னர் அவதார் சீரிஸ் படங்கள் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2ம் பாகம் வெளியாகவே கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.
புதிய டிரைலர்
அவதார் 2 அல்லது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வரும் டிசம்பர் 16ம் தேதி 180 நாடுகளுக்கு மேல் வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய பிரம்மாண்ட டிரைலர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் டிக்கெட்டுகளை வாங்கும் நிலைக்கு நிச்சயம் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2 படத்தின் டிரைலர் புக்கிங்கும் இப்பவே வெளிநாடுகளில் ஆரம்பம் ஆகிவிட்டன.
Avatar 2 Trailer Tamil
அட்டகாசமான காட்சிகள்
முதல் பாகத்திலேயே அப்படியொரு விஷுவலை பார்த்து உலக ரசிகர்கள் இந்த படத்துக்கு 120 ரூபாய் எல்லாம் இல்லை 1000 ரூபாய் கூட கொடுக்கலாம் என சொல்லி வந்த நிலையில், 2ம் பாகத்தின் முதல் நாள் டிக்கெட் விலை எல்லாம் எப்படி எகிறப் போகிறதோ தெரியவில்லை. முதல் பாகத்தில் கிளம்பிய விண்கலம் மீண்டும் பெரும் படையுடன் பாண்டோராவை தாக்கும் விதமகாவும் நாயகன் தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இணைந்து கடல் வாழ் உயிரினங்களின் உதவியுடன் இந்த முறை எப்படி எதிரிகளை விரட்டுகிறார் என்பது தான் கதையாக இருக்கும் என்பதை டிரைலரை பார்த்தாலே உணர முடிகிறது.
மிரட்டும் பிரம்மாண்டம்
விஷுவல் ட்ரீட்டுக்கு நிச்சயம் அவதார் 2 படத்தில் ஜேம்ஸ் கேமரூன் எந்தவொரு குறையும் வைத்திருக்க மாட்டார் என்பதை தாண்டி திரைக்கதையில் அவர் எந்தளவுக்கு வலிமையான ட்ரீட்மென்ட் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்தே இந்த படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்கின்றனர்.
ரீ ரிலீஸ்
அவதார் 2 படம் வருவதை முன்னிட்டு சமீபத்தில் அவதார் முதல் பாகத்தை 4கே தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வெளியிட்டு அந்த அனுபவத்திற்கு ரசிகர்களை தயார் படுத்தி இருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். 2ம் பாகம் வெற்றி பெற்றால் தான் 3 மற்றும் 4ம் பாகத்தை ரிலீஸ் செய்வேன் என்றும் அதிரடியாக கூறி விட்ட நிலையில், இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
Avatar 2 Trailer Tamil
டைட்டானிக் ஹீரோயின்
ஜேம்ஸ் கேமரூனின் ஃபேவரைட்டான டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் திருப்தி செய்யுமா? என்பது டிசம்பர் 16ம் தேதி தெரிந்து விடும்.
இந்த இணைப்பை க்ளிக் செய்து ட்ரைலரை பார்க்கலாம்.