இசையமைப்பாளர் அனிருத்துக்கு டும் டும்... மணப்பெண் யார்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.;

Update: 2022-05-25 12:45 GMT

தனுஷ் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத் ரவிச்சந்தர். இவர், நடிகர் ரவி ராகவேந்திரனின் மகனாவார். முதல் படத்திலேயே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதை தொடர்ந்து, ஹிட் பாடல்களை கொடுத்து, சீக்கிரமே முன்னணி இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்தார். ரஜினி, கமல் உள்பட, முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து, உச்சத்தை தொட்டுள்ளார். நடிகர் கமல் நடிப்பில் விரைவில் வெளியாகும் விக்ரம் படத்தில் 'பத்தல பத்தல'  என்ற பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் பாடப்பட்டு வருகிறது.

இளம் இசையமைப்பாளரான அனிருத்,  அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை; பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். குறிப்பாக, நடிகை கீர்த்தி சுரேஷை அனிருத் திருமணம் செய்ய கொள்ள இருப்பதாகவும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி,  பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், அனிருத்திற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக, தற்போது புதிய தகவல் கசிந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளில்,  அனிருத் குடும்பத்தார் தீவிரமாக இருப்பதாகவும், பிரபல தொலைக்காட்சியின் உரிமையாளர் ஒருவரின் மகளை,  அனிரூத் திருமணம் செய்யவுள்ள இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News