அஜித் படத்தில் கெட்ட வார்த்தை பேசி ஷாக் கொடுத்த நடிகை
நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தில் கெட்ட வார்த்தை பேசிய பிரபல நடிகை யாருன்னு கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க;
நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார்.
நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்துள்ள திரைப்படம் "துணிவு". இப்படத்தை 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
தற்போதுவரை இப்படத்தின் புதிய அப்டேட் ஏதும் வரவில்லை, ஆனால் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகள் தங்களின் டப்பிங் பணியை முடித்துள்ளது குறித்து பதிவிட்டு இருந்தனர்.
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது இந்த படத்தில் அஜித் செம்ம கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது அவருடன் மஞ்சு வாரியார், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்பொழுது இந்த படத்தின் டிரைலர், டீசர் போன்றவை தீவிரமாக உருவாகி வருகிறதாம் வெகு விரைவில் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்த நடிகை சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் டப்பிங் முடித்துள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான மமதி சாரி.
ஹெச். வினோத் மற்றும் மமதி சாரி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது அவர் துணிவு படத்தில் நடித்ததை உறுதிப்படுத்தியது. படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான மமதி சாரி. இதன் மூலம் அவர் துணிவு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இந்த படத்தின் டப்பிங் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் கூறுகையில், துணிவு திரைப்படத்தில் நான் கொஞ்சம் காட்சிகளில் தான் நடித்துள்ளேன். அந்த சீன்லையும் நான் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறேன் என வெளிப்படையாக விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் நடிகர் அஜித் நடித்துள்ள "துணிவு" திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் தான் இளைய தளபதி விஜய் நடித்துள்ள "வாரிசு" திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களையுமே திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் பொங்கலுக்கு மோதிக்கொள்ள போவதால் திரை ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.