கால் காயம் குணமடைந்து ஷூட்டிங்கிற்கு தயாராகும் பூஜா ஹெக்டே
ஷூட்டிங்கின் போது காலில் காயம் அடைந்த பூஜா ஹெக்டே, இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு தற்போது வாக்கர் உதவியுடன் தத்தி தத்தி நடக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்;
நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டேவுக்கு பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது சல்மான் கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் செட்டில் தனது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
சமீபத்தில் பூஜாவுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. காலில் உள்ள தசைநார் கிழிந்ததால் பூஜா அவதிப்படுகிறார். இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் காலில் கட்டு போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது காலில் உள்ள தசைநார் கிழிந்துள்ளது.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என தெரியாமல் கவலை அடைந்தனர். அவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பின் போது ஆக்ஷன் காட்சிகளில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் காயம் அடைந்த அவர், அது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு இப்போது அவர், தற்போது வாக்கர் உதவியுடன் தத்தி தத்தி நடக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் செவிலியர் உதவியுடன் வாக்கர் வைத்து மெல்ல நடந்து வருகிறார். இது குறித்து பூஜா ஹெக்டே கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக எப்படி நடக்க வேண்டும் என வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பயின்றேன். தினந்தோறும் நாம் செய்யும் வேலை எப்படி மறந்தேன் என்பதை நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது என என பதிவிட்டுள்ளார்.