நடிகை குஷ்புவா.. அவரின் மகளா? பிரமிப்பில் ரசிகர்கள்

நடிகை குஷ்புவா அல்லது அவரின் மகளா? என கூறும் அளவிற்கு அவர் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.;

Update: 2022-07-14 05:46 GMT

வைரலான புகைப்படம்.

நடிகை குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1989ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். ரிக்சா மாமா, சின்ன தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் வாங்கினார்.

கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் 20 வயது குறைந்தது போல தெரிகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனையும் தாண்டி ஒருவர், குஷ்புவின் மகளோ என கூறும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News