நடிகை அமலா பாலுக்கு தொல்லை கொடுத்த ஆண் நண்பர் கைது
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உள்ள நடிகை அமலாபாலின் வீட்டில் தொல்லை கொடுத்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்;
பாவேந்தர் சிங்தத்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடிகை அமலாபால் தங்கி இருந்தார். அப்போது அவரது ஆண் நண்பர் என கூறப்படும் பாவேந்தர் சிங்தத் இருவரும் அண்மையில் ரூ.3.75 கோடியில் கடாவர் திரைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பவேந்தர்சிங்தத் உள்ளிட்ட 12 பேர் மீது ஏமாற்றுதல் 16 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாவேந்தர் சிங்தத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.