விவேக், ஒரு சமூக சீர்திருத்தவாதி

விவேக் ஒரு நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

Update: 2021-04-17 05:06 GMT

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் (பழைய படம்)

விவேக், நடிகர் மட்டுமல்ல சமூக சீர்திருத்தவாதி. அவரது படங்களில் நகைச்சுவையுடன் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பி சிந்திக்க வைப்பார். நடிப்பு என்பது ரசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும்தான் என்ற கொள்கை உடையவர்.


அதனால்தான் அவர் சின்னக்கலைவாணர் என்று செல்ல பெயர் பெற்றார். என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு திரைப்படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை துணிச்சலோடு கூறியவர் விவேக் மட்டுமே.  மூட நம்பிக்கைகளை தகர்த்து எறியவும்,  ஜாதி, மத வேறுபாடுகளை எதிர்த்தும், லஞ்சம் போன்ற சீர்கேடுகளையும்,  தண்ணீர் பிரச்னை, இயற்கை சீரழிவு, அரசியலில் நிலவும் ஊழல் போன்றவைகளை நறுக்கென்று வசனம் பேசி சிரிக்க வைப்பார். 


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது கொள்கைகளையே பின்பற்றியவர். ஒரு கோடி மரங்கள் நட்டு சாதனை படைத்தவர். அவரது மறைவு பலரையும் கலங்க வைத்துள்ளது. அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரங்கள் உயிர்வாழ்கின்றன. 


Tags:    

Similar News