புதிய தொழில் செய்ய நடிகர் விஜய் திட்டமா..? கசிந்த தகவல்..!
New Business Plan- நடிகர் விஜய் தனது மண்டபங்களை புதிய தொழில் செய்வதற்கு வாடகைக்கு விடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
New Business Plan- விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக அசத்தல் நடிப்பிலும், அட்டகாச நடனத்திலும் தனித்திறன் காட்டி வருகிறார். அவரது பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனும் ஒன்றும் குறைந்துவிடவில்லை.
அடுத்து விஜய் நடிப்பில் வாரிசு என்ற படம் வெளியாக தயாராகி வருகிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
ஆனால், அங்கு சினிமா துறையில் பிரச்னை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
புதிய தொழிலில் ஈடுபட திட்டம்..?
சினிமாவில் விஜய் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். மேலும் சொந்தமாக நிறைய மண்டபங்களும் வைத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் ஷோபனா மண்டபம், வடபழனியில் ஒரு மண்டபம், போரூரில் சங்கீதா மண்டபம், புதுக்கோட்டையில் ஒன்று என நிறைய மண்டபங்கள் நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத ரூ. 8 லட்சத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் தெரிகிறது.
தற்போது மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகைக்கு விடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்கின்றனர் இந்த தகவல் அறிந்த வட்டாரத்தினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2