குழந்தைகளுக்கு நடிகர் சூரி சொன்ன அறிவுரை!
தனது குழந்தைகளுக்கு நடிகர் சூரி சொன்ன அறிவுரை வைரலாகி வருகிறது.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் சூரி. இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார்.
சூரியைப் பொருத்தவரை சிறுவயது முதலே சினிமா மீது ஆர்வம். எப்படியாவது நடிகராகி விட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதனால் சென்னை செல்ல பணம் வேண்டுமே என கிளீனர் வேலை செய்தாராம்.
ஆரம்பத்தில் வில்லன் போன்ற படங்களில் காமெடி நாயகருடன் துணை நடிகராக சில படங்களில் நடித்தார். வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர் நடித்த பரோட்டா சாப்பிடும் பந்தயத்திற்கான காட்சி ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது. அந்த வகையில் அந்தக் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காலையில் இருந்து பட்டினியாகக் கிடந்தாராம்.
இப்படி படத்தில் தனது காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களிலம் மெனக்கிட்டுள்ளார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. காமெடி கதாநாயகனாக சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவர்களது கூட்டணியில் மெகா ஹிட் ஆனது.
அதே போல ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களிலும் அவருடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து சசிக்குமார், கார்த்தி, விஷால், ரஜினிகாந்த், விஜய் என அத்தனை நடிகர்களுடனும் நடித்து பெயர் வாங்கினார். கடைசியாக இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாகவே நடித்து விட்டார்.
அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களும் சூரியை காமெடியனாக இருந்ததை விட கதாநாயகனாக நடித்ததை வரவேற்றனர். அதனால் அவர் மீண்டும் கருடன் படத்தில் நடித்து புகழ்பெற்றார். கொட்டுக்காளி படத்தில் நடித்து அசத்தினார். தற்போது விடுதலை 2ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சூரி தனது பிள்ளைகளுக்கு சொன்ன அறிவுரை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. என்னன்னு பார்ப்போமா...
என் பிள்ளைகளுக்கு நான் இப்படித் தான் அறிவுரை சொல்வேன். நீயும் உங்க அம்மாவும் காஸ்ட்லியா துணி எடுக்கப் போற கடைக்கு வெளியே தான் நான் வேலை செஞ்சிக்கிட்டு சாப்பிட்டு இருந்தேன். நான் மேல. நீங்க கீழன்னு என் குழந்தைங்க மனசுல ஒரு துளி கூட எண்ணம் வந்துடக்கூடாது. கீழன்னு நினைக்கும் போது உங்க அப்பா கீழ இருந்து தான் வந்தாருன்னு நினைச்சிக்கோங்க... என்கிறார் நடிகர் சூரி.