விஜயை வம்புக்கு இழுத்த பயில்வான் ரங்கநாதன்
பிரபல நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் எப்போது பேசினாலும் சர்ச்சைக்கு ஆளாகி விடுகிறார். இப்போது நடிகர் விஜய் குறித்தும் விமர்சித்து பேசியிருக்கிறார்.;
தமிழ் சினிமா நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை அவிழ்த்து விடுவதில் இவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். அதே போல நடிகர்களையும் அவ்வப்போது வம்புக்கு இழுப்பார். இப்போது தமிழ்சினிமாவில் அதிகளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார். விஜய்யும் சினிமாவில் முழுக்கு போட்டு விட்டு அரசியலில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் இவருக்குக் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் பயில்வான் இவரது அரசியல் வருகையைப் பற்றி அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களிப்பதற்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்ல. அப்படின்னா நீங்க எம்ஏ. பிஎல்லா, மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கா?, டாக்டரா, இல்லீயே? அப்படின்னா உங்களை எப்படி முதல் அமைச்சரா ஆக்குவோம்? படுத்துக்கிட்டு எச்சில் துப்பறீங்களே விஜய்? புதிய வரவு எங்களுக்குத் தேவை. அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகள் ஆகிவிட்டது.
அப்போ நீங்க என்ன செய்யணும்? என் கட்சியில குடிச்சவன் எவனையும் சேர்க்க மாட்டேன்னு சொல்லுங்க. உங்க கட்சியில உள்ள பொதுச்செயலாளரே பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் தான். புஸ்ஸி ஆனந்த். இன்னைக்கு மதுவிலக்கு முதல் கையெழுத்தா போடுவேன்னு சொன்னீங்கன்னா உங்களுக்கு ஓட்டு விழும். முதல்ல உங்க கட்சிக்காரர்களை குடிக்க வேண்டாம்னு சொல்லுங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பயில்வான் ரங்கனாதனின் இந்த விமர்சனம் பல்வேறு தரப்பினரால் வரவேற்கப்பட்டாலும், பலர் ரங்கனாதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். விஜயை விமர்சிக்கும் இவர் மற்ற அரசியல்கட்சித்தலைவர்களையும் இதே போல் விமர்சிப்பாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.