நாசரை பாராட்டிய நடிகர் திலகம் சிவாஜி..!
தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது.;
பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர். நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தேன்.
திடீரென்று என் அருகில் வந்த சிவாஜி சார் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் "பாய் அப்பனை திட்டுற பாக்கியம் எந்த பிள்ளைக்கு கிடைக்கும்? யோசிச்சிட்டு நிக்காதய்யா.... என்னைத் திட்டய்யா....என்று எனக்கு தைரியமூட்டி நடிக்க வைத்தார்.
அதன்பிறகு தேவர்மகன் ப்ரீவியூ காட்சிக்கு என்னை அழைத்தனர். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. அன்று இரவு எனது அறையில் தொலைபேசி ஒலித்தது எதிர்முனையில் பிரபு" அப்பா பேசனும்னு சொன்னார் என்று சொல்ல எனக்கு படபடப்பானது.
அடுத்த நொடி சிம்மக்குரல் கரஜித்தது "பாய் இப்பதான்யா தேவர்மகன் படத்தை பார்த்தேன் சும்மா சொல்லக் கூடாதய்யா... படத்துல மாயத்தேவனாகவே வாழ்ந்துருக்கேடா... என்று மனம் திறந்து பாராட்ட.. எனக்கு பேசவே முடியாமல் குரல் கட்டிக்கொண்டது இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்? - நாசர் ஒரு பேட்டியில்.....