நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார்.;

Update: 2022-07-28 07:18 GMT

நடிகர் தஷஷின் 'நானே வருவேன்' படத்தை அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் இந்துஜா, ரவிச்சந்திரன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இவரது அண்ணன் செல்வராகவனும் இந்த படத்தில் நடித்து வருகிறார். தனது இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பது இதுவே முதல் படமாகும்.

இந்நிலையில் தற்போது 'நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் பிறந்தநாளான இன்று இந்த போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், பிறந்தநாள் காணும் தனுஷ், மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க 'நானே வருவேன்' படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.




Tags:    

Similar News