actor atharvaa childhood photo-நடிகர் அதர்வா சின்னப்புள்ளையா எப்டீ இருப்பாரு..? பாருங்க..!
actor atharvaa childhood photo-அதர்வா நடிகர் முரளியின் மகன் ஆவார். பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி அவரது நடிப்பை பேசவைத்தது.;
actor atharvaa childhood photo-தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் நடிகர் முரளி. இவர் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருந்தார். இவரின் மகன் அதர்வாவும் தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார். நடிகர் முரளியின் மகன் அதர்வா 2010 -ம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவர் சில திரைப்படங்களில் நடித்தாலும், இயக்குனர் பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான 'பரதேசி' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது நடிப்பும் அதில் மிகவும் பேசப்பட்டது. இயக்குனர் பாலா அதர்வாவின் நடிப்பை அவரிடம் இருந்து வாங்குவதற்கு பிழிந்து எடுத்திருப்பார்.
கடந்த ஆண்டில் அதர்வா நடிப்பில் ட்ரிக்கர், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் போன்ற படங்கள் வெளியானது. ஆனால் மூன்று படத்திற்கும் ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். பெரிய அளவில் படம் வசூல் செய்யவும் இல்லை.
அதர்வாவின் சிறுவயது புகைப்படம்
சமீபகாலமாக பல சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் அதர்வா அவரின் அம்மா, அப்பா உடன் சேர்ந்து சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் பாருங்கள்.