ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று மாலை 5 மணிக்கு தேதி அறிவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-13 06:46 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதனையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு  ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவவைகளுக்கு தேர்தல் நடத்தாமல் இருந்தது.

மேலும், புதியதாக பிரிக்கப்பட்டுள்ள வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, தென்காசி, காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த மாதத்துக்குள் ஊரக பகுதிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற பகுதிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் இராம.பிரசன்ன வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி வெளியிடப்படும்.

இதற்கான  சந்திப்பில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும்  முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றோடு நிறைவடையும் நிலையில், மாலை உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News