தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம்..!

சென்னை கமிஷனராக ஷங்கர் ஜிவால்..;

Update: 2021-05-08 02:15 GMT

தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம்:சென்னை கமிஷனராக ஷங்கர் ஜிவால்

தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளனர். சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதேபோல் தமிழக முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும் தற்போது தமிழக காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக கோவை மாநகர கமிஷனர் எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம் சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியம செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயந்த் முரளிக்கு பதிலாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News