அது என்னங்க HSRP நம்பர் பிளேட்? தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

அது என்னங்க HSRP நம்பர் பிளேட்? அப்படி என்றால் என்ன? அதை வாங்குவது எப்படி வாங்குவது போன்ற விபரங்களை பார்க்கலாம் வாங்க.

Update: 2024-02-15 15:50 GMT

What is High Security Registration Plate

வாகனங்களில் புதிய வகை HSRP நம்பர் பிளேட்டுகளை பொருத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து வாகனங்களிலும் இவ்வகை நம்பர் பிளேட்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

What is High Security Registration Plate

விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. HSRP நம்பர் பிளேட்டுகள் என்றால் என்ன? அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

HSRP நம்பர் பிளேட் என்றால் என்ன?: HSRP என்றால் High-Security Registration Plate என்பதாகும். அதாவது தமிழில் உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் என்று அர்த்தம் ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள சாதாரண நம்பர் பிளேட்டுகளில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி விட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் பல நடக்கின்றன. இதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது தான் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட். 2022ஆம் ஆண்டுக்கு பின் விற்பனையான வாகனங்களில் இவ்வகை நம்பர் பிளேட்டுகளே கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

இருப்பினும் பழைய வாகனங்களிலும் இவ்வகை நம்பர் பிளேட்டுகளை பொருத்த வேண்டும் என கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.

What is High Security Registration Plate

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டின் சிறப்பு: இந்த வகை நம்பர் பிளேட்டில் சர்வதேச பதிவு குறியீடு, தனித்துவமான வரிசை எண், அசோக் சக்ராவின் 3டி ஹாலோகிராம் போன்றவை இடம்பெற்றிருக்கும். காவல்துறையினருக்கு இந்த வகை நம்பர் பிளேட்டுகளை அடையாளம் காண்பது எளிது. இந்த நம்பர் பிளேட்டுகளை மீண்டும் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாது.இவ்வகை நம்பர் பிளேட்டை வீட்டில் இருந்தே பெற முடியும்.

வீட்டில் இருந்தபடியே பெறலாம்:

SIAM எனப்படும் Society of Indian Automobile Manufacturers இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.siam.in என்ற தளத்திற்கு சென்று "Book HSRP" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

What is High Security Registration Plate

உங்களின் பெயர், வாகன எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, மாநிலம் , மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்

பின்னர் அதில் வரும் checkbox இல் agree என்பதை கிளிக் செய்து submit செய்யவும் அடுத்ததாக ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லும்,

அதில் உங்கள் மாவட்டம், வாகன வகை (இரு சக்கரம், 4 சக்கரம் அல்லது வணிக வாகனம்) உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர் எந்த நிறுவனத்தின் வாகனம் என்பதை உள்ளீடு செய்தால் அதற்கு ஏற்ப பின்வரும் நான்கில் ஏதேனும் ஒரு தளத்திற்கு உங்களை அழைத்து செல்லும்

1. bookmyhsrp.com 2. orderyourhsrp.com 3. getmyhsrp.com 4. makemyhsrp.com இதில் வாகன எண், சேசிஸ் எண் , என்ஜின் எண், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

What is High Security Registration Plate

உங்கள் பகுதியில் உள்ள கடைக்கு சென்று பிளேட்டை பொருத்துவது என்றால் அதற்கான நாள் மற்றும் நேரத்தை முன் பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் உள்ளீடு செய்தபடி உங்கள் வீட்டிற்கோ அல்லது நீங்கள் குறிப்பிட்ட கடைக்கோ நம்பர் பிளேட் வந்து சேர்ந்துவிடும்.

ஒரு வேளை ஆன்லைனில் உங்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை எனில் , வாகன ஷோரூம்கள் அல்லது ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News