Toyota NEO Steer Technology-இனி கார் ஓட்ட கால் வேணாம்..!

இனி கார் ஓட்ட கைகள் இருந்தாலே போதும். கால்களுக்கு வேலையே இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளது டொயோட்டா நிறுவனம். இது புதிய டெக்னாலஜி.

Update: 2023-10-27 08:30 GMT

Toyota NEO Steer Technology-டொயோட்டா நிறுவனம் வடிவமைத்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளும்  கொண்ட ஸ்டியரிங் வீல்(கோப்பு படம்)

Toyota NEO Steer Technology,Toyota, Toyota Land Cruiser Prado, Toyota NEO Steer Concept, Toyota NEO Steer, What is Toyota NEO Steer, What is NEO Steer, Japan Mobility Show, Tokyo Motor Show

இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான கார்களில் கால்களைக் கொண்டே கட்டுப்படுத்தும் வகையில் பிரேக், ஆக்சலரேட்டர் மற்றும் கிளட் பெடல்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த செட்-அப்பில் மாற்றம் கொண்டு வந்தால் என்ன என்று யாரும் சிந்திக்கக் கூடாதா என்ன? மாற்றித்தான் பார்ப்போமே என்று ஒரு நிறுவனம் வந்திருக்கிறது. 

Toyota NEO Steer Technology


இந்தியாவில் மட்டுமில்லைங்க, உலக நாடுகள் அனைத்திலும் பிரேக் (Brake), ஆக்சிலரேட்டர் (Accelerator) மற்றும் கிளட்ச் (Clutch) ஆகிய பெடல்கள் கால்கள் கட்டுப்படுத்தும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இது காருக்கு மட்டுமல்ல அனைத்து வகை வாகனங்களுக்கும் இது பொருந்தும். கார், பேருந்து மற்றும் டிரக் என அனைத்து வாகனங்களிலும் இதே அமைப்புதான் இருக்கின்றது.

இந்த செட்-அப் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடது என அமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுஹான். ஆனால் அமைப்பு எல்லாம் ஒன்றுதான். ஆனால், அது கால்களால் கட்டுப்படுத்தும் வகையில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரியான சூழலில் எதிர்காலத்தில் இந்த பெடல்கள் கார்களின் அடிப்பகுதியில் வைக்காமல் மாற்றி அமைக்க புதிய திட்டம் வந்திருக்கிறது. ஆமாங்க, புதிய டெக்னாலஜி வந்திருக்கின்றது.

அதாவது, கால்களைக் கொண்டு இயக்கப்பட்ட காரின் பிரேக் மற்றும் ஆக்சிலரேஷன் ஆகியவையை ஒரு கார் உற்பத்தி நிறுவனம் மாற்றத் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் அந்த புதிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது.

Toyota NEO Steer Technology

அட ஆமாங்க, பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டாதான் அந்த நிறுவனம். டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அதன் அப்டேட் செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை வெளியுலகிற்கு காட்சிப்படுத்தியது. இந்த காரில் அது நியோ ஸ்டீர் (Neo Steer) எனும் புதிய வகை ஸ்டியரிங் வீலை அது பயன்படுத்தி இருக்கின்றது.

பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் ஸ்டியரிங் வீலே இது ஆகும். இந்த ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல் பட்டன்களை டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அதுதவிர, பிரேக் மற்றும் ஆக்சிலரேஷன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சிறிய கன்ட்ரோலும் இந்த வீலிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது முற்றிலும் தனித்துவமான செட்-அப் ஆகும். இந்த செட்-அப்பை வேறு எந்த கார்களிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பயணிகள் வாகனத்தில் ஸ்டியரிங் வீலில் பிரேக் மற்றும் ஆக்சிலரேஷன் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பைக்குகளின் கன்ட்ரோல்களைத் தழுவியே இந்த ஸ்டியரிங் வீலை டொயோட்டா நிறுவனம் கான்செப்டாக தயார் செய்திருக்கின்றது.

Toyota NEO Steer Technology

காரின் தரை பகுதியில் எந்த கன்ட்ரோலும் இல்லாத நிலையே தென்படுகின்றது. எனவே, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளாலும் இந்த காரை எளிதாக பயன்படுத்த முடியும் என்பது துள்ளியமாகத் தெரிகின்றது. மேலும், உயரம் குறைவாக இருப்பவர்களாலும் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே டொயோட்டா புதிய நியோ ஸ்டீர் ஸ்டியரிங் வீலை உருவாக்கி இருக்கின்றது.


விரல் நுனியில் அனைத்து கன்ட்ரோல்களும் வழங்கப்பட்டு இருப்பதால் கால்களுக்கான தேவை முற்றிலுமாக இந்த காரில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, துடிப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்த புதிய ஸ்டியரிங் வீலை டொயோட்டா தயார் செய்திருக்கின்றது. ஆனால், இந்த அம்சத்தை எப்போது அது நடைமுறை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என்பது பற்றிய தகவலை வெளியிடவில்லை.

Toyota NEO Steer Technology

வெகு விரைவில் இந்த அம்சம் அதன் பிரபல கார் மாடல்களில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முதலில் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான லேண்ட் க்ரூஸரிலேயே அது இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய பணக்காரர்கள் தொடங்கி உலக பணக்காரர்கள் வரை பலரின் பிரியமான கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் இருப்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.

Tags:    

Similar News