Toyota Mid Size Suv India-இந்தியாவில் டொயோட்டாவின் மிட்-சைஸ் 7 சீட்டர் கார்..!
டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் தனி பெயரும் புகழும் உள்ளது. தற்போது இந்தியாவில் மிட் சைஸ் 7 சீட்டர் காரை இறக்கவுள்ளது.;
Toyota Mid Size Suv India
இந்திய சந்தையில் டொயோட்டா (Toyota) நிறுவனத்துக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கார் விற்பனையும் சீராக உயர்ந்து கொண்டே வருகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய புதிய தயாரிப்புகள் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.
Toyota Mid Size Suv India
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துடனான கூட்டணி, டொயோட்டா நிறுவனத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இதுதவிர டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகிய பிரபலமான கார்களின் விற்பனையும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்கி தனது விற்பனைச் சந்தையை விரிவுபடுத்திக் கொள்வதற்காக டொயோட்டா நிறுவனம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 7 சீட்டர் காராக இருக்கும் என கூறப்படுகிறது.
Toyota Mid Size Suv India
எனவே, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். தற்போதைய நிலையில் 340டி (340D) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அமைக்கவுள்ளதாக கூறப்படும் புதிய தொழிற்சாலையில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.
தற்போதைய நிலையில் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்திற்கு 2 தொழிற்சாலைகள் உள்ளன. அவை இரண்டுமே கர்நாடக (Karnataka) மாநிலம் பெங்களூர் (Bangalore) அருகே உள்ள பிடதி (Bidadi) பகுதியில்தான் அமைந்துள்ளன.
இந்த பிடதி என்ற பெயரை எங்கேயோ கேள்விபட்டது போல் இருக்கிறதா? குழப்பமே வேண்டாம். சாட்சாத் நம்ம நித்யானந்தா (Nityananda) ஆசிரமத்திற்காக புகழ்பெற்ற பகுதிதான் இந்த பிடதி ஏரியா.
அங்கேதான் டொயோட்டா நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலையும் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தை இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் டொயோட்டா நிறுவனம் மௌனம் காத்து வருகிறது.
Toyota Mid Size Suv India
அண்ணனுக்கு போட்டி யாரு?
டொயோட்டா நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரானது, மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் 340டி கார்களை உற்பத்தி செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தைக்கான தேவை போக, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும். அனேகமாக வரும் 2025 அல்லது 2026ம் ஆண்டில்தான், டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை டொயோட்டா நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்பதை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Toyota Mid Size Suv India
அடுத்த ஆண்டு கார் வாங்க நினைப்பவரா?
அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் ஏற்றதாக இருக்கும். இன்னும் 2, 3 ஆண்டுகள் கழித்து புதிய 7 சீட்டர் காரை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்து கொண்டிருந்தால், இது உங்களுக்கு ஏற்ற காராக இருக்கலாம். இந்த காரின் ஆரம்ப விலை (Price) அனேகமாக 14 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.