Mg Comet Ev Suv Model- எம்ஜி கோமெட் இவி எஸ்யூவி வெர்சன் வரப்போகுது..!!

கார் சந்தையில் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் எம்ஜி கார் நிறுவனம் தனது இவி காரை எஸ்யூவி வெர்சனில் வெளியிட உள்ளது.

Update: 2023-10-26 11:24 GMT

mg comet ev suv model-எம்ஜி  கோமெட் இவி எஸ்யூவி கார் (கோப்பு படம்)

Mg Comet Ev Suv Model

எம்ஜி நிறுவனம் தனது கோமெட் இவி காரின் எஸ்யூவி வெர்ஷனை விரைவில் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை பார்ப்போம் வாங்க.

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கான சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிதாக கார் வாங்க நினைக்கும் பலர் எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்தியாவில் எஸ்யூவி காரர்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் செடான் கார்களின் விற்பனை சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பல கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களை எஸ்யூவி ரக கார்களாக மாற்றியமைத்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Mg Comet Ev Suv Model

இந்திய கார் தயாரிப்பாளர்கள் போல எஸ்யூவி என்ற காருக்கான அர்த்தத்தையே மாற்றி அமைத்துள்ளனர். எந்த கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் உயர்வான சீட்டிங் பொசிஷன் இருக்கிறதோ அதை எல்லாம் எஸ்யூவி கார் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் தனது சிறிய ரக எஸ்யூவி கார் ஒன்றை தயாரித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் தான் கோமெட் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரை அப்டேட் செய்து கோமெட் எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜியின் துணை நிறுவனமான பௌஜுன் என்ற சீனாவை சேர்ந்த நிறுவனம் இந்த காரை ஏற்கனவே தயார் செய்து யப் என்ற பெயரில் காட்சிப்படுத்தி விட்டது. இந்த கார் சிறிய ரக காராக உருவாக்கப்பட்டுள்ளது.

பௌஜூன் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட இந்த யப் கார் ஒரு எஸ்யூவி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக காராகவும் இந்த கார் மொத்தம் 3381 மிமீ நீளமும் 1685 மிமீ அகலமும் 1721 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸை பொருத்தவரை 2110 மிமீ நிளமும் இருக்கிறது. 

Mg Comet Ev Suv Model


இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் கோமெட் இவி காரை ஒப்பிடும்போது 47மிமீ நீளமும் 180மிமீ அகலமும் 45மிமீ உயரமும் 100மிமீ வீல் பேஸூம் அதிகமாக இருக்கிறது. அதாவது இந்த கார் கோமெட் காரை விட சற்று பெரிய காராக தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு போட்டியாக தற்போது மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்தின் எஸ் பிரஸ்ஸோ என்ற கார் இருக்கிறது. இந்த காரும் சிறிய ரக கார் தான். ஆனால் மாருதி நிறுவனம் இதை ஒரு எஸ்யூவி கார் ஸ்டைல் காராக வடிவமைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News