ஹார்லி-டேவிட்சன் இந்திய மாடல் பைக்..! எதிர்பார்ப்புகளை மீறி குவியும் ஆர்டர்கள் : தலைமை நிர்வாகி
கடந்த 2020ம் ஆண்டில் இந்திய பைக் சந்தையில் இருந்து வெளியேறிய அமெரிக்க நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் மீண்டும் புதிய மாடலுடன் களமிறங்கியுள்ளது.;
Harley-Davidson's India model bike in tamil, Harley-Davidson's India model bike, Harley-Davidson's India model நியூ bike, H-D X440 model, Harley-Davidson in Indian Bike Market, Harley-Davidson and Hero Motor Co.,
ஹார்லி-டேவிட்சன் சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு அதன் அல்ட்ரா-பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து 2020ம் ஆண்டில் அதன் பெரும்பாலான டீலர் நெட்வொர்க்கை மூடுவதற்கு ஒரு தசாப்தத்தை செலவிட்டது.
அமெரிக்க பெரிய பைக் தயாரிப்பாளரான ஹார்லி-டேவிட்சன் நேற்று ஒரு உள்ளூர் உற்பத்தியாளருடன் இணைந்து இந்தியாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்திய புதிய மாடலுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் எதிர்பார்ப்புகளை மீறி குவிந்து வருவதாக கூறியது.
ஹார்லி மற்றும் பிரிட்டிஷ் போட்டியாளரான ட்ரையம்ப் ஆகிய இரு நிறுவனங்களும் மொபைல் போன்கள் மற்றும் கார்கள் என பல்வேறு வகைகளில் பிரீமியம் பிரிவுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர். அந்தவகையில் மிகப்பெரிய மோட்டார் பைக் சந்தையான இந்தியாவில் தங்களின் மலிவான விலை மாடல்களை உலகளவில் வெளியிட்டுள்ளனர்.
"X440 ஹார்லி பைக் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். முன்கூட்டிய ஆர்டர்கள் துவக்கத்தில் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளன" என்று Harley-Davidson தலைமை நிர்வாக அதிகாரி Jochen Zeitz தெரிவித்தார். மேலும் வேறு விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினர், இந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையான பிராண்ட்டட் ராயல் என்ஃபீல்டுடன் மோதியாக வேண்டும். ராயல் என்ஃபீல்டு அதிக எண்ணிக்கையிலான ஷோரூம்கள் மற்றும் வலுவான விற்பனைக்குப் பிந்தைய சேவை என பெரிய நெட்வொர்க்குடன் வேரூன்றி பல ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.
X440 ஹார்லி-டேவிட்சன் இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதைக் குறிக்கிறது; இந்திய சந்தையை குறிவைக்கிறது. இம்முறை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான Hero Motor Co - நிறுவனத்துடன் இணைந்து ரூ.233,000-க்கு (ரூ.2 இலட்சத்து 33ஆயிரம்) குறைவான விலையில் பைக்குகளை தயாரித்துள்ளது.
ஹார்லி-டேவிட்சன் சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு அதன் அல்ட்ரா-பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து 2020ம் ஆண்டில் அதன் பெரும்பாலான டீலர் நெட்வொர்க்கை மூடுவதற்கு ஒரு தசாப்தத்தை செலவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதால் "இப்போது நான் இந்தியாவை ஒரு நீண்ட கால வாய்ப்பாகப் பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக இது ஒரு பெரிய சந்தை" என்று Zeitz கூறினார்.
கடுமையான கடன் நிலைமைகள் அமெரிக்க நுகர்வோரின் கொள்முதல் திறனைக் குறைக்கும் என்பதால் இப்போது இந்தியாவின் பக்கம் புதிய பந்தயத்துடன் களமிறங்கியுள்ளது, ஹார்லி-டேவிட்சன்.
இந்த நிறுவனம், முந்தைய நாளில், உற்பத்தி இடையூறுகளால் பாதிக்கப்பட்ட இரண்டாவது காலாண்டு லாபத்தில் 18% சரிவை சந்தித்தது குறித்து அறிவிப்பு வெளியிட்டது.