மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் கொளத்தூர் 64வது வட்ட அதிமுக வேட்பாளர்

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் கொளத்தூர் அதிமுக வேட்பாளர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசிபெற்றார்.;

Update: 2022-02-08 02:44 GMT

சென்னை விமான நிலையத்தில் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஆசி பெற்றார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கொளத்தூரில் போட்டியிடுகிறார். இவர் சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர் தொகுதியில் மக்கள் பெறும் அதிருப்தியில் இருக்கிறார்கள். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த போது அதை சரிப்பட செயல் படவில்லை என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.

ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார். மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். போலீஸ் அராஜகம் அதிகம் இருக்கிறது. மக்களின் ஆதரவு உள்ளதால் வெற்றி உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News