நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது : எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார் முன்னாள் முதல்வர்

Update: 2022-02-08 12:00 GMT

நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிலையில்,  வெளியில்  நீட் தேர்வுக்கு அதிமுக தான் காரணம் என திமுக கூட்டணி கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழலில் அன்றைய அதிமுக அரசு இருந்தது இன்றும் நீட் தேர்வும் நடைபெறுகிறது.திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் நீட் தேர்வு எனும் வார்த்தையே அறிமுகமானது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செல்லும் போது சட்டவல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு சட்ட ரீதியாக இந்த பிரச்னையை அணுக வேண்டும். சட்ட வல்லுநர்கள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இது  மாணவர்களின் உணர்வு பூர்வமான  பிரசனை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News